
கஜா புயல் இன்று இரவு கரையை கடக்க உள்ள நிலையில், வேடிக்கை பார்க்கவோ புகைப்படங்கள் எடுக்கும் ஆர்வத்திலோ கடற்கரைக்கு செல்ல வேண்டாம் என்று தமிழக அரசு வேண்டுகோள் விடுத்துள்ளது,.
புதுச்சேரி, கடலூர், சிதம்பரம், காரைக்கால், நாகை செல்லும் அரசு பேருந்துகள் கிழக்கு கடற்கரை சாலையை தவிர்த்து, பைபாஸ் சாலை வழியாக செல்ல அரசு போக்குவரத்து கழகத்துக்கு அறிவுறுத்தப் பட்டுள்ளது.
கஜா புயல் முன்னெச்சரிக்கை காரணமாக புதுச்சேரியில் இருந்து காரைக்காலுக்கு செல்லும் புதுச்சேரி அரசு பேருந்துகள் நிறுத்தப் பட்டுள்ளன.
கஜா புயல் எச்சரிக்கையாக, தஞ்சாவூர் , திருவாரூர் , புதுக்கோட்டை , நாகை , ராமநாதபுரம் , கடலூர் மாவட்டங்களை சேர்ந்தவர்கள் இன்று மாலை 6 மணிக்கு மேல் பேருந்துகளில் பயணிக்க வேண்டாம் என்று கேட்டுக் கொள்ளப் பட்டிருக்கிறார்கள்.
இந்த மாவட்டங்களில் இன்று மாலை 6 மணியில் இருந்து நாளை காலை 6 மணி வரை பேருந்துகள் இயக்க தடை விதிக்கப் பட்டுள்ளது.
கஜா புயல் காரணமாக இராமேஸ்வரம் கடல் சீற்றமாக காணப்படுகிறது.



