பேஸ்புக்.,கில் ‘லைவ்’வாக விஷம் குடித்த இளைஞர்! காரணம் இதுதான்!

கிரைம் நியூஸ் சற்றுமுன் திருச்சி லைஃப் ஸ்டைல்
suicidaldeath - 2026

பேஸ்புக்கில் லைவ்வாக இளைஞர் ஒருவர் விஷம் குடித்து அதிர்ச்சியை ஏற்படுத்தினார்.

எஸ்ஐ ஒருவர் தன் மீது பொய் வழக்கு போட்டு உள்ளதாக கூறி இளைஞர் ஒருவர் ஃபேஸ்புக்கில் நேரலை செய்து விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்றார். இந்த பரபரப்பு சம்பவம், கரூரில் நடந்துள்ளது.

கரூர் அருகே, வசித்து வருபவர் சதானந்தம். 23 வயதான இவர் பெயிண்டர் வேலை செய்கிறார். மேலும், மணல் மாட்டு வண்டி ஓட்டி தொழிலிலும் ஈடுபட்டு வருகிறார்!

நேற்று முன்தினம் இரவு 11.30க்கு அமராவதி ஆற்றுப் பகுதியில் அமர்ந்து ஃபேஸ்புக் நேரலையில் அவர் பேசியுள்ளார். அப்போது கரூர் பசுபதிபாளையம் எஸ்ஐ நாகராஜ் என் மீது திருட்டு உள்ளிட்ட மூன்று பொய் வழக்குகளைப் போட்டுள்ளார். அத்தனையும் பொய் வழக்கு.

பொய் வழக்கு போடுவதால் மன உளைச்சலில் உள்ள நான் விஷம் குடித்து தற்கொலை செய்து கொள்கிறேன். என் சாவுக்கு அந்த எஸ்.ஐ. தான் காரணம் என்று கூறியபடி குளிர்பானத்தில் விஷம் கலந்து குடித்தார்

இந்நிலையில் நேற்று அதிகாலை 12.30க்கு மயங்கிய நிலையில் இருந்த சதானந்தத்தை அப்பகுதி மக்கள் மீட்டு கரூர் அரசு மருத்துவமனையில் சேர்த்துள்ளனர்

இந்தச் சம்பவம் குறித்து பசுபதிபாளையம் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்!

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.