டி.ஆர்.பாலுவின் எல்டிடிஈ கருத்து குறித்து மதிமுக, விசிக, மே 17 கும்பலின் விளக்கம் என்ன?

அடடே... அப்படியா? சற்றுமுன் தமிழகம் புகார் பெட்டி
IMG 20191121 WA0007 - 2026

விடுதலைப் புலிகளால் சோனியாவின் உயிருக்கு ஆபத்து: திமுக எம்.பி. டி ஆர் பாலு நாடாளுமன்றத்தில் பேசியது சரிதானா?

மதிமுக, விசிக, மே 17 கும்பலின் விளக்கம் என்ன?

மத்திய அரசு காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, அவரது குடும்பத்தினருக்கு சிறப்பு பாதுகாப்பைக் குறைத்தது. இது சம்மந்தமாக நேற்று மக்களவையில் காங்கிரஸ் மற்றும் திமுக உறுப்பினர்கள் கேள்வி எழுப்பினர்.

மக்களவை திமுக குழுத் தலைவர் டி.ஆர்.பாலு, இதுபற்றி பேசுகையில்’ கடந்த மே மாதம் 14 ஆம் தேதி விடுதலைப் புலிகள் அமைப்பின் மீது விதிக்கப்பட்ட தடையை நீட்டித்து அறிவிக்கை வெளியிட்டது.

விடுதலைப் புலிகள் அமைப்பு இந்தியாவின் ஒருமைப்பாட்டையும் இறையாண்மையையும் சீர்குலைக்கும் நடவடிக்கைகளை மேற்கொண்டது. அந்த அமைப்பு தொடர்ந்து இந்திய எதிர்ப்பு தோரணையை பின்பற்றுகிறது.

அந்த அமைப்பின் மூலம் இந்தியர்களுக்கு ஆபத்து இருக்கிறது எனத் தெரிவித்துள்ளது. அப்படிப்பார்க்கையில் சோனியா காந்தியும் ஒரு இந்திய பிரஜைதான். அவருக்கு பாதுகாப்பு வழங்க வேண்டும்’ என டி.ஆர்.பாலு பேசினார்.

திமுக மக்களவை குழுத் தலைவர் டி.ஆர்.பாலுவின் இக்கருத்து குறித்து மதிமுக, விசிக, மே 17 கும்பலின் விளக்கம் என்ன?

  • இர.அருள்

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.