சென்னையில் ஒரே நாளில் இதுவரை 15 பேர் உயிரிழப்பு!

அடடே... அப்படியா? சற்றுமுன் சென்னை லைஃப் ஸ்டைல்
coronavirus
coronavirus

சென்னையில் கொரோனா தொற்றுக்கு இன்று இதுவரை 15 பேர் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த திருவொற்றியூரைச் சேர்ந்த 42 வயது பெண் உள்பட 8 பேர் உயிரிழந்துள்ளனர். திருமுல்லைவாயல், கொடுங்கையூர், அம்பத்தூர், விருகம்பாக்கம், கீழ்ப்பாக்கம், திருவல்லிக்கேணி பகுதியை சேர்ந்தவர்கள் உயிரிழந்துள்ளனர்.

*ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த 7 முதியவர்கள் உயிரிழந்துள்ளனர்.

செங்கல்பட்டு மாவட்டத்தில் மேலும் 95 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. செங்கல்பட்டில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 2800-ஆக அதிகரித்துள்ளதாக மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.

சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனை டீன் ஜெயந்திக்கு கொரோனா தொற்று உறுதியான நிலையில் வீட்டில் அவர் தன்னை தனிமைப்படுத்திக் கொண்டார் என்று செய்திகள் பரவின. இதை அடுத்து மருத்துவக் கல்லூரிக்கு புதிய டீன் நியமிக்கப் பட்டிருப்பதாகவும் கூறப்பட்டது.

சென்னை மருத்துவக்கல்லூரி டீன் ஜெயந்தி மருத்துவ விடுப்பில் அனுப்பப்பட்டார் என்றும், ஜெயந்திக்கு பதில் மருத்துவர் நாராயணசாமி டீனாக நியமனம் செய்யப்பட்டார் என்றும் தகவல் வெளியானது.

இதனிடையே, கொரோனாவால் உயிரிழந்தவர்கள் விகிதத்தை மறைக்கும் அவசியம் அரசுக்கு இல்லை என்றும், வெளிப்படைத் தன்மையோடு அரசு செயல்பட்டு வருகிறது; தவறான குற்றச்சாட்டுகளை யாரும் கூற வேண்டாம் என்றும், கேள்வி கேட்பது சுலபம்;களத்தில் இருந்து போராடும்போது தான் அதன் வலி தெரியும் என்றும், அமைச்சர் விஜயபாஸ்கர் கூறியுள்ளார்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.