
ரெம்டெசிவிர்’ மருந்தை கொரோனா பாதிப்புக்குள்ளானவர்களுக்கு பயன்படுத்த, மத்திய சுகாதாரத்துறை பரிந்துரை செய்துள்ளது.
கொரோனா வைரஸ் பாதித்தவர்களுக்கு சிகிச்சை அளிப்பதற்கான திருத்தப்பட்ட நெறிமுறைகளை மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் நேற்று வெளியிட்டது. அதில், கொரோனா வைரசால் மோசமாக பாதிக்கப்பட்டோருக்கு, வைரஸ் தடுப்பு மருந்தான, ‘ரெம்டெசிவிர்’ஐ வழங்க, பரிந்துரை செய்துள்ளது. மேலும், நோய் எதிர்ப்பு மண்டலத்தை மாற்றியமைக்கும், ‘டோசிலிசுமாப்’ மருந்தும் பரிந்துரைக்கப்பட்டுள்ளது.
இதற்கு முன் வழங்கப்பட்டு வந்த, மலேரியா தடுப்பு மருந்தான, ‘ஹைட்ராக்சி குளோரோக்வின்’ மாத்திரைகளை ஆரம்ப கட்ட நோயாளிகளுக்கு மட்டுமே வழங்க முடியும் என்றும், வைரசால் மோசமாக பாதிக்கப்பட்டுள்ள நோயாளிகளுக்கு வழங்க முடியாது என்றும் சுகாதாரத்துறை விளக்கம் அளித்துள்ளது. மேலும், கொரோனா தீவிரம் மிதமாக உள்ள நோயாளிகளுக்கு பிளாஸ்மா சிகிச்சை அளிக்கலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.