ஜம்மு காஷ்மீர்: பாகிஸ்தானின் அத்துமீறலில் இந்திய வீரர் உயிரிழந்தார்!

இந்தியா சற்றுமுன்
miltry 1

ஜம்மு காஷ்மீர் பூஞ்ச் மாவட்டத்தில் கட்டுப்பாட்டு எல்லைக்கோட்டுப் பகுதியில் பாகிஸ்தான் ராணுவம் தொடர்ந்து அத்துமீறலில் ஈடுபட்டு வருகிறது. இந்நிலையில் துப்பாக்கிச் சூட்டில் இந்திய ராணுவ வீரர் ஒருவர் வீரமரணம் அடைந்தார், 2 ராணுவ வீரர்கள் காயமடைந்தனர்.

பூஞ்ச், ரஜவ்ரி மாவட்டத்தில் பாகிஸ்தான் ராணுவத்தின் அத்துமீறலுக்கு இந்த மாதத்தில் 3வது வீரர் உயிரிழந்துள்ளார்.

சனிக்கிழமை இரவு ஷாபூர்-கெர்னி செக்டாரில் பாக்கிஸ்தான் ராணுவத்தினர் துப்பாக்கிச் சூடும் ஷெல் தாக்குதலும் நடத்தினர். இதனையடுத்து இந்திய ராணுவமும் வலுவான பதிலடி கொடுத்தது.

இந்தத் துப்பாக்கிச் சூட்டில் 3 இந்திய ராணுவ வீரர்கள் காயமடைந்தனர். மூவரும் உடனடியாக மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டனர், இதில் ஒருவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

இந்தியப் பதிலடியில் பாகிஸ்தான் ராணுவத்திற்கு ஏற்பட்ட உயிரிழப்பு விவரம் இதுவரை தெரியவில்லை.

ஜூன் 4ம் தேதி ரஜவ்ரி மாவட்டத்தில் சுந்தர்பானி செக்டாரில் பி.மதியழகன் என்பவர் பாக். துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்தார். ஜூன் 10ம் தேதி நாயக் குருசர்ண் சிங் பாகிஸ்தான் அத்துமீறலுக்கு உயிரிழந்தார்.

ALSO READ:  ஆடிப் பூர நாளில் நந்தவனத்தில் எழுந்தருளிய ஆண்டாள்!

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.