சென்னை, காஞ்சி, செங்கை மாவட்டங்களில் கனமழை எச்சரிக்கை!

சற்றுமுன் சென்னை
IMG 20191201 WA0002 - 2026

சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் , செங்கல்பட்டு மாவட்டங்களில் அதி கனமழைக்கு வாய்ப்புள்ளதால் தகுந்த முன்னெச்சரிக்கையுடன் செயல்பட வேண்டும் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ளது சென்னை அருகே காற்றழுத்த தாழ்வு நிலை உருவாகி இருப்பதால் சென்னை புதுச்சேரி கடலோர பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது காற்றழுத்த தாழ்வு நிலை நீடித்து வருவதால் சென்னை திருவள்ளூர் காஞ்சிபுரம் செங்கல்பட்டு உள்ளிட்ட வட மாவட்டங்களில் மிக கனத்த மழை பெய்யும் என்று எச்சரிக்கை கொடுக்கப்பட்டுள்ளது

எனவே தாழ்வான பகுதிகளில் இருப்பவர்கள் மிகுந்த எச்சரிக்கையுடன் செயல்பட அறிவுறுத்தப் படுகிறார்கள்!

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.