போட்டுத் தாக்கு.. போட்டுத் தாக்கு..! ஈவ்டீசிங் செய்த இளைஞரை புரட்டி எடுத்த பெண் காவலர்! வைரல் வீடியோ!

அடடே... அப்படியா? பொது தகவல்கள் லைஃப் ஸ்டைல்
potuthaakku - 2026

பள்ளி செல்லும் மாணவிகளை கேலி செய்த நபரை பெண் கான்ஸ்டபிள் ஒருவர், பொது இடத்தில் அடித்து உதைத்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

உ.பி.,யில் பாலியல் பலாத்கார சம்பவங்கள் அதிகரித்து வருவதாக குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன. இந்நிலையில் கான்பூரின் பித்துர் பகுதியில், பள்ளிக்கு செல்லும் மாணவிகளை, வழியில் நின்று கேலி செய்து, பாலியல் தொந்தரவு அளித்து வந்துள்ளார் அப்பகுதி இளைஞர் ஒருவர்.

இதனைக் கண்ட பெண் கான்ஸ்டபிள் ஒருவர், அந்த நபரை பொது இடத்தில், தனது ஷூவால் கடுமையாக மாறி மாறி அடி பின்னி பெடலெடுத்துள்ளார். இந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் பரவி வருகிறது.

அந்த பெண் கான்ஸ்டபிளை பலரும் பாராட்டி வருகின்றனர். பித்தூர் பகுதி காவல்நிலையத்தில் கான்ஸ்டபிளாக பணியாற்றி வரும் சன்சல் சவ்ரசியா தான் அந்த இளைஞரை துவைத்து எடுத்துள்ளார். இவர் ஆன்டி-ரோமியோ படையை சேர்ந்தவர்.

பள்ளி மாணவிகளுக்கு தெந்தரவு அளிக்கப்படுவது தொடர்ந்து புகார்கள் வந்ததன் அடிப்படையில் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும், அந்த நபர் கைது செய்யப்பட்டு, அவர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளதாக கான்பூர் எஸ்.பி., அனில் குமார் தெரிவித்துள்ளார்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.