“மொக்கு மாவும்,நிஷித்த வஸ்துவும்”
( அரிசி மாவு மற்றும் முள் கத்தரிக்காய் பற்றி பெரியவாள் விளக்கம்)
(தாய்மார்களுக்கு பெரியவாளின் அறிவுரை இரண்டு நிகழ்ச்சிகள்.)…………………………………………………………………………………
சொன்னவர்;ஸ்ரீமடம் பாலு
தொகுப்பாசிரியர்;கோதண்டராம சர்மா.தட்டச்சு;
வரகூரான் நாராயணன்
நிகழ்ச்சி-1
அரிசி மாவா?மொக்கு மாவா?
(பெரியவாளின் அறிவுரை)
சொன்னவர்;ஸ்ரீமடம் பாலு
தொகுப்பாசிரியர்;கோதண்டராம சர்மா.
தட்டச்சு;வரகூரான் நாராயணன்
சின்னக் காஞ்சீபுரத்தில் இருக்கும் போதெல்லாம் வரதராஜப்பெருமாள் கோவிலில்,பிரதக்ஷிணம் செய்வது, தவறாத கடமை,பெரியவாளுக்கு.
ஒரு விடியற்காலைப் பொழுதில்,கோவிலில் பிரதக்ஷிணம் செய்துவிட்டு,பக்தர்கள் எல்லாம் விஷ்ணு ஸஹஸ்ரநாம பாராயணம் செய்து கொண்டு உடன்வர, தெருவில் நடந்து வந்தார்கள்,பெரியவா.
ஒரு வீட்டின் வாசலில்,ஒரு பெண் குழந்தை கோலம் போட்டு கொண்டிருந்தது.
பெரியவா நின்றார்கள்.
“கோலம் நன்னாப் போடறியே! பேஷ்! ஆனா கோலம் அரிசி மாவாலே தான் போடணும். அப்போதான் ஈ,எறும்பு,பட்சியெல்லாம் அரிசி மாவை சாப்பிடும். கோலம் போட்ட உன்னை சந்தோஷமா பார்க்கும். மொக்குமாவாலே போட்டால் அது எந்த ஜந்துவுக்கும் உபயோகப்படாது இல்லையா?”
பெண் குழந்தை அழகாக தலையை ஆட்டிவிட்டு நமஸ்காரம் செய்தது.
பெரியவாளின் இந்த அறிவுரை, அந்தக் குழந்தைக்கு மட்டும் தானா? இல்லை எல்லாக் குழந்தைகளுக்குமா?
தாயார்கள் யோசிக்கட்டும்.
……………………………………………………………………………………………….
நிகழ்ச்சி-2
நிஷித்த வஸ்து.
சொன்னவர்-ஆர்.ஜி.வெங்கடாசலம் சென்னை-24
தனூர்மாஸ பிக்ஷாவந்தனம்,எங்கள் மனையைச் சேர்ந்த உற்றார் உறவினருடன் ஸ்ரீமடத்துக்கு
சென்றிருந்தேன்.சிறு சிறு மூட்டைகளாகப் பலவகைப்பட்ட கறிகாய்கள் கொண்டு சென்றிருந்தோம். தரையில் கொட்டச் சொன்னார்கள் பெரியவா,
“அது என்ன? கத்தரிக்காயா? எங்கே,கிட்ட கொண்டு வா..”
ஒரு தட்டில் நாலைந்து கத்தரிக்காய்களை வைத்து, அவர்கள் பார்வையில் படும்படியாகக் காட்டினேன்
“முள் கத்தரிக்காய் இல்லையே? நல்ல வேளை, முள் கத்தரிக்காய், வெள்ளைக் கத்தரிக்காய்களை இங்கே உபயோகப்படுத்தறதில்லை. ‘நிஷித்த வஸ்து – என்று சொல்லுவா…”
என் பத்தினி கன்னத்தில் போட்டுக்கொண்டாள். உபதேசம் அவளுக்கு மட்டுமா?.



