
தென்காசியில் வீடு புகுந்து இரண்டு பேர் 100 பவுன் தங்கத்தை கொள்ளையடித்து விட்டு இரு சக்கர வாகனத்தில் தப்பி ஓடியுள்ளனர். இந்தச் செய்தியால் பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
தென்காசியில் தங்கபாண்டியன் மருத்துவமனைக்கு அருகில் பட்டப்பகலில் வீட்டின் உரிமையாளரை கட்டிப்போட்டு விட்டு பகல் கொள்ளை நடத்திய கொள்ளையர்கள் தப்பி ஓடியுள்ளனர். இது பொது மக்களை அதிர்ச்சி அடைய வைத்துள்ளது.
தென்காசி மாவட்டம், தென்காசி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட சம்பா தெருவில் ஜெயபால் தனது மனைவி விஜயலட்சுமி(57) மற்றும் மகனுடன் வசித்து வருகிறார்

இந்நிலையில் இன்று காலை (07.09.2020) ஜெயபால் மற்றும் அவரது மகன் தொழில் காரணமாக வெளியே சென்றிருந்த நிலையில் அவரது மனைவி மட்டும் வீட்டில் தனியாக இருந்துள்ளார்
அப்போது பகல் 12.30 மணி அளவில் இரண்டு நபர்கள் வீட்டின் கதவைத் தட்டியுள்ளனர். விஜயலட்சுமி கதவை திறந்தவுடன் இரண்டு நபர்களும் உள்ளே புகுந்து வீட்டில் இருந்த கத்தியை எடுத்து விஜயலட்சுமியை மிரட்டி அங்கிருந்த ஒயரால் கட்டிப்போட்டு அவர் வீட்டில் இருந்த 800 கிராம் தங்க நகை மற்றும் பணம் ரூபாய் 50,000த்தை கொள்ளையடித்து தப்பி ஓடிவிட்டனர்…

தகவலறிந்து விரைந்து வந்த போலீசார் மோப்ப நாய்கள் மற்றும் கைவிரல் ரேகை நிபுணர்களுடன் சேர்ந்து புலன் விசாரணை செய்து வருகின்றனர் மேலும் அவர்களை 2 தனிப்படை அமைத்தும் தேடி வருகின்றனர்.
அந்த இரண்டு நபர்களும் கொள்ளையடித்துவிட்டு கருப்பு நிற பல்சர் இருசக்கர வாகனத்தில் தப்பி செல்வதாகவும், இரண்டு நபர்களில் ஒருவர் கிரே கலர் சட்டை மற்றும் கருப்பு நிற பேண்ட், கருப்பு நிற ஷு அணிந்துள்ளார். மற்றொருவர் நீல நிற பேண்ட் மற்றும் பர்தா அணிந்துள்ளனர். அவர்கள் குறித்த புகைப்படமும் வெளியிடப்பட்டுள்ளது.

இவர்கள் குறித்த தகவல் தெரிந்தால் தென்காசி காவல் நிலையம் 04633 222278 அல்லது மாவட்ட காவல் அலுவலகம் 8610791002 என்ற எண்ணிற்கு தகவல் தெரிவிக்குமாறு தென்காசி மாவட்ட காவல் துறை சார்பாக கேட்டுக் கொள்ளப்படுகிறது.