விஸ்வாசம் படத்தை விஸ்வாசத்துடன் நினைவு கூர்ந்த தியேட்டர் உரிமையாளர்!

சினி நியூஸ் சினிமா
ajith - 2026

இந்த ஆண்டு விஸ்வாசம் படமானது தல அஜித் நடிப்பில் பொங்கல் ஸ்பெஷலாக திரைக்கு வெளியாகியது .

இந்த படம் ரஜினியின் பேட்ட படத்துடன் போட்டியாக களமிறங்கியது . இந்தவேளையில் இந்த வருடம் முடிவடையும் தருணத்தில் பல தியேட்டர் உரிமையாளர்கள் தங்கள் திரையரங்க வசூல் குறித்து தெரிவித்து கொண்டு வருகின்றனர்.

இதில் சென்னை ரோகினி திரையரங்க உரிமையாளர் ஒரு பேட்டியில் ‘எங்களுக்கு நகரம் மட்டுமின்றி பி,சி ஏரியாக்களிலும் திரையரங்கு உள்ளது.

அந்த திரையரங்கில் விஸ்வாசம் படம் ஓடியது பிரமிக்க செய்கின்றது, தொடர்ந்து பல நாட்கள் மொத்த காட்சிகளும் அரங்கு நிறைந்து போனது. இனிமேல் இப்படி ஒரு படம் வருமா? என்று தெரியவில்லை,

மிகப்பெரிய லாபத்தை விஸ்வாசம் படம் எங்களுக்கு கொடுத்துள்ளது ‘ என்று தெரிவித்துள்ளார்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.