செய்திகள்… சிந்தனைகள்… – 28.12.2019

CAAவிற்கு எதிராக புனிதப்போர் நடத்த வேண்டும் பல மாநில சர்சுகளில் கிறிஸ்மஸ் செய்தி.

பாராளுமன்ற மெஜாரிட்டியை வைத்துக்கொண்டு அரசியலைப்பு சட்டத்தை மாற்ற முடியாது. – மும்பையில் நடந்த CAAக்கு எதிரான போராட்டத்தில் உமர் கலீத்

முன்னாள் அசாம் காங்கிரஸ் முதல்வர் ஹித்தேஸ்வர் சைக்கியா அரசியல் லாபத்திற்காக வங்கதேச முஸ்லீம்களை இந்தியாவிற்குள் ஊடுருவச் செய்தார் என்று காங்கிரஸின் எம்.பி. க்ரித் சில்லையா ஒரு விவாதத்தில் ஒத்துக்கொண்டுள்ளார்.

2004,2009ம் ஆண்டுகளில் காங்கிரஸ் முதல்வர் அசோக் கெலட், பாகிஸ்தானிலிருந்து வந்த ஹிந்து அகதிகளுக்கு குடியுரிமை அளிக்கக்கோரி மன்மோகன் சிங் அரசிற்கு எழுதிய கடிதம் வெளி வந்துள்ளது.

இந்தியா பாதுகாப்பற்ற நாடு, ICC இந்தியாவை புறக்கணிக்க வேண்டும் – பாகிஸ்தான் முன்னாள் கேப்டன் ஜாவத் மியாந்தத்

அசாமில் சட்ட விரோதமாக ஊடுருவிய 61,774 வங்கதேசத்தினரை காணவில்லை. உள்ளூர் மக்களுடன் கலந்துவிட்டார்கள். – அரசு வழக்கறிஞர் துஷ்ஹர் மேத்தா உச்ச
நீதிமன்றத்தில் அறிக்கை தாக்கல்.

உத்திரபிரதேசத்தில் சில முஸ்லீம்கள் சமுதாய முக்கியஸ்தர்கள் CAAவிற்கு எதிரான வன்முறை போராட்டடத்திற்கு அரசாங்கத்திடம் மன்னிப்புக் கோரியும், பொதுச் சொத்திற்கு சேதம் விளைவித்தமைக்காக அபராதமாக 6.2 லட்சம் ரூபாய் காசோலையும் அளித்துள்ளார்கள்

கேரள மாநிலம் காசர்கோட்டில் ஆர்.எஸ்.எஸ் அமைப்பினர் நடத்திய பதசஞ்சலன் நிகழ்ச்சியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியைச் சேர்ந்தவர்கள் தாக்குதல் நடத்தியதில் ஆர்.எஸ்.எஸ். உறுப்பினர் 15பேருக்கு காயம்

சூர்ய கிரகணத்தின் போது சென்னையில் உள்ள கோவிலில்களைத் திறக்க உத்தரவு விட்டது ஹிந்து அறநிலையத்துறை.

- Advertisement -