பாகிஸ்தான் எஜமானருக்கு விசுவாசிக்கும் திமுக., கனிமொழி! அலங்‘கோல’ விஷக்கிருமி!

சற்றுமுன் புகார் பெட்டி லைஃப் ஸ்டைல்
kanimozhitweet2 horz - 2026

இந்துக்கள் திமுகவிற்கு எதிராக கோலம் போடத் தொடங்கினால்..? என்ன ஆகும் என்பதைக் காட்டுவோம் என்று எச்சரித்துள்ளார் இந்து தமிழர் கட்சியின் தலைவர் ராம.ரவிக்குமார்.

இது குறித்து அவர் குறிப்பிட்ட போது…

* நம் நாட்டில் வாசல் கூட்டுவது, கோலம் போடுவது தேச விரோதம் என அறிந்துகொண்டேன். பெற்ற சுதந்திரத்தை பேணிக்காத்து அடிப்படை உரிமைகளை அனைவருக்கும் உறுதிசெய்து தங்கள் எஜமானரின் மனம் குளிர செயல்படும் எடப்பாடி அரசுக்கு பாராட்டுக்கள் என்று திமுக எம்பி கனிமொழி கருணாநிதி தெரிவித்திருக்கிறார்.

தமிழ்நாட்டில் கோலம் போடுவதை யாரும் எதிர்க்கவில்லை. கோலத்தில் உங்களுடைய கொள்கைகளை எதிர்ப்பைத் தெரிவிக்கும் போது அதை கண்டு அரசு சும்மா இருக்க வேண்டிய அவசியமில்லை.

கனிமொழி அவர்களே! எத்தனை கிறிஸ்தவ இஸ்லாமிய வீட்டு வாசலில் கோலம் இருக்கிறது ? பதில் சொல்லுங்கள்!!

கோலம் போடுவது “இந்து தமிழர்களின் மரபு” கோலம் போடக் கூடிய யாரையும் இந்த நாட்டை விட்டு வெளியேற்ற சொல்லவில்லை இந்த சட்டம்.

இவ்வளவு பேசக்கூடிய நீங்கள் இந்த சட்ட மசோதா நிறைவேறும் போது ஓட்டெடுப்பில் கலந்து கொள்ளாமல் வெளிநடப்பு செய்தது யாரை மனம் குளிரச் செய்ய?
இந்தக் கோலத்தின் மூலம் எதிர்ப்பு தெரிவிக்க ஒவ்வொரு இந்துவும் திமுகவுக்கு எதிராக பிரசாரத்தை தொடங்கினால், நீங்கள் ஏற்றுகொள்வீர்களா?

* இந்து விரோதி திமுக
* இந்துக்கள் பொட்டு வேண்டாம் ஓட்டு வேண்டுமா?
*குடியை தமிழகத்தில் அறிமுகப்படுத்தி குடிகெடுத்த திமுக!!
*வாரிசு அரசியல் செய்யும் திமுக
* பாகிஸ்தான் திமுக
*தேச விரோத திமுக *தெய்வ விரோத திமுக
*இந்திய விரோத திமுக
*தமிழர் விரோத திமுக……!!!

இப்படி ஒவ்வொரு வீட்டிலும் இந்துக்கள் கோலமிட தொடங்கினால் அதை மனப்பூர்வமாக திமுக ஏற்றுக் கொள்ளுமா கனிமொழி அவர்களே பதில் சொல்லுங்கள்!!

“கோலத்தில் “அலங்கோல அரசியல்” செய்யும் திமுக தமிழகத்தில் ஒரு நச்சுக் கிருமி” -என்று கூறியுள்ளார்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.