மமமுக ஆம்புலன்ஸில் மருத்துவமனை சென்ற நெல்லை கண்ணன்; ‘நெஞ்சு வலிக்குதாம்’!

உள்ளூர் செய்திகள் சற்றுமுன் நெல்லை புகார் பெட்டி லைஃப் ஸ்டைல்
nellai kannan hospital - 2026

திருநெல்வேலியில் காங்கிரஸ் பிரமுகரும் பேச்சாளருமான நெல்லை கண்ணன், குடியுரிமை திருத்தச் சட்டம் குறித்து முஸ்லிம் அடிப்படை வாத அமைப்பான எஸ்டிபிஐ கட்சியினர் ஏற்பாடு செய்திருந்த பொதுக் கூட்டத்தில் பெசிய போது, பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித் ஷா ஆகியோர் குறித்து அவதூறாகப் பேசியதுடன், அவர்கள் சோலியை ஏன் இன்னும் முடிக்காமல் வைத்திருக்கிறீர்கள் என்று கொலை மிரட்டல் விடுத்தும் பேசினார்.

இதை அடுத்து, பாஜக.,வினர் அளித்த புகாரின் பேரில் மேலப்பாளையம் போலீசார் நெல்லை கண்ணன் மீது வழக்கு பதிவு செய்தனர். அவரை கைது செய்ய வலியுறுத்தி பாஜக.,வினர் டவுன் அம்மன் சன்னதியில் உள்ள அவரது வீட்டை முற்றுகையிட்டனர். அந்நேரம் அங்கே போலீசார் குவிக்கப்பட்டனர்.

நெல்லை கண்ணனை வீட்டிலிருந்து மருத்துவமனை கொண்டு செல்ல வேண்டுமென SDPI கட்சியினர் மற்றும் திமுக.,வினர் நெல்லை கண்ணன் வீட்டு முன் திரண்டனர். அவரை அங்கிருந்து அழைத்துச் சென்று மருத்துவமனையில் சேர்த்துவிடும் முயற்சியில், நெல்லையில் அங்கங்கே ஓடிக் கொண்டிருக்கும் மனிதநேய மக்கள் முன்னேற்றக் கழகத்தின் ஆம்புலன்ஸை அவர் வீட்டின் முன் நிறுத்தி, எப்படியாவது நெல்லை கண்ணனை மருத்துவமனைக்குக் கொண்டு செல்ல முயற்சி செய்தனர்.

nellaikananhouse - 2026
நெல்லை கண்ணன் வீட்டின் முன் திரண்ட இந்துமுன்னணி பாஜக., வழக்கறிஞர்கள், தொண்டர்கள்

அதே நேரம், நெல்லை கண்ணனை தப்பிக்க விட கூடாது என பா.ஜ.க இந்துமுன்னணி வழக்கறிஞர்கள், தொண்டர்கள் அவர் வீட்டின் முன் திரண்டனர். இதை அடுத்து, நெல்லை கண்ணன் வீட்டு முன்பு பரபரப்பு ஏற்பட்டது.

இதனிடையே, முதல்வர் இ.பி.எஸ்., துணை முதல்வர் ஓ.பி.எஸ்., ஆகியோரை அவதூறாக பேசிய நெல்லை கண்ணன் மீது வழக்கு பதிவு செய்ய வலியுறுத்தி அ.தி.மு.க.,வினர் நெல்லை காவல் ஆணையர் அலுவலகத்தில் மனு கொடுத்தனர்.

இருப்பினும், போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ள நிலையில், உடல்நலக் குறைவு எனக்கூறி நெல்லை கண்ணன் மருத்துவமனை ஒன்றில் அதே மமமுக., ஆம்புலன்ஸில் அழைத்துச் செல்லப்பட்டு, மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

1 thought on “மமமுக ஆம்புலன்ஸில் மருத்துவமனை சென்ற நெல்லை கண்ணன்; ‘நெஞ்சு வலிக்குதாம்’!”

  1. ஆக்சிசன் முகமூடி இல்லை
    நர்ஸ் யாரும் உடன் இல்லை
    இப்படி அழைத்துச் சென்றால் மருத்துவ துறையால் மிகவும் முக்கியமான நேரமாக கூறப்படும் கோல்டன் அவர் சேவை இல்லாவிட்டால் உயிருக்கே ஆபத்து என்று தெரியாமல் செய்வது போல் தோன்றுகிறது
    ஒரு வேளை அவர் பூரண குணம் அடைந்து வீடு திரும்பும் காட்சியோ?

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.