வரலாற்றில் முதல் முறையாக… நேதாஜி தொப்பி அணிந்த தலைவராக … மோடி!

modi nethaji cap - 2026

நேதாஜியின் ஆசாத் – ஹிந்த் இராணுவம் அமைக்கப்பட்ட 75 ஆம் ஆண்டு விழாவை தில்லியில் கொடி ஏற்றி கொண்டாடினார் பிரதமர் மோடி !

அசாத் ஹிந்த் இராணுவத்தை கவுரவித்து , நேதாஜி சுபாஷ் சந்திர போசுக்கு மோடி புகழாரம்!

ஒரு குடும்பம் மட்டுமே விடுதலைப் போரில் ஈடுபட்டது போன்ற மாயையை உறுவாக்க பல தியாகிகளை மறக்கடிக்கச் செய்த காங்கிரஸ் சதியை அம்பலப்படுத்தினார் பிரதமர் மோடி!

ஆசாத் ஹிந்த் படைக்கு ஆதாரமாக இருந்தது நம் தமிழகம் ! இத்தனை காலம் மறைக்கப்பட்ட நம் தமிழர்களின் தியாகத்தை மதித்த பிரதமர் மோடிக்கு தமிழர்கள் நன்றி தெரிவிக்கிறோம் !

தமிழகத்தில் நேதாஜி சுபாஷ் சந்திரபோசுக்கு உதவிய பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் போன்ற மகான்களின் தியாகத்தை மதித்த மோடி அவர்களுக்கு வாழ்த்துக்கள் !

சர்தார் படேல் , அம்பேத்கர் போன்றோர் காங்கிரஸ் குடும்ப நலனுக்காக மறக்கடிக்கப்பட்டதைச் சுட்டிக் காட்டிய பிரதமர் உரை , குடும்ப அரசியலிலிருந்து , ஜனநாயக அரசியலுக்கு நாட்டை எடுத்துச் செல்லும் முயற்சியாகத் தெரிகிறது !

வாழ்க நேதாஜி போசின் புகழ் !

ஆசாத் இந்து சர்க்காரின் 75-வது ஆண்டுவிழா டெல்லியில் 21-10-2018 அன்று நடந்தது. இதில் டெல்லி செங்கோட்டையில் தேசியக் கொடியை ஏற்றிவைத்து மரியாதை செலுத்திய பாரத பிரதமர் மோடி அதன்பின் உரையாற்றினார். அவர் பேசியதாவது:

ALSO READ:  சோழவந்தான் ஜெனகை மாரியம்மன் வைகாசி தேரோட்டம் கோலாகலம்!

சுதந்திரப் போராட்டத்தில் இந்திய ராணுவத்தின் பங்களிப்பை யாரும் மறக்க முடியாது. நேதாஜி சுபாஷ் சந்திரபோஷின் கனவின்படி, இந்திய ராணுவம் தொடர்ந்து நவீனப்படுத்தப்பட்டு வருகிறது.

ஆனால், சுதந்திரம் அடைந்து 70 ஆண்டுகள் ஆகியும் இன்னும் நேதாஜியின் கனவுகள் முழுமையாக நிறைவடையவில்லை. சுதந்திரத்துக்குப்பின், இந்தியா பல்வேறு முக்கிய மைல்கல்லைக் கடந்து முன்னோக்கி சென்று வருகிறது, ஆனால், புனிதமான புதிய உச்சத்தை இன்னும் அடையவில்லை.

ஆனால், இந்த இலக்கை அடைய பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி உறுதிபூண்டுள்ளது. பல்வேறு சக்திகள் நம்மீது தாக்குதல் நடத்திய போதிலும் கூட புதிய இந்தியா எனும் இலக்கு மூலம் அடைவோம். புதிய இந்தியா என்பது, நேதாஜி சுபாஷ் சந்திரபோஷ் என்ன நினைத்தாரோ, உருவகமாக்கினோரோ அதுதான்.

நேதாஜியால் ஈர்க்கப்பட்ட ஒவ்வொரு இந்தியரும், நமக்கு எதிரான சக்திகளுடன் போரிட்டு, அவர்களைத் தோற்கடித்து, நாட்டின் கட்டமைப்புக்கு முழு அளவில் பங்களிப்பு செய்வது கடமையாகும்.

தேசியக் கொடி ஏற்றிவைத்து மரியாதை செலுத்திய முதல் பாரத பிரதமர் மோடி ஜீ!ஆனால், கடந்த காலங்களில் இருந்த அரசு ஆங்கிலேய மனப்பான்மையுடன் இருந்து விட்டது.  ஆனால், பாஜக ஆட்சிக்கு வந்தபின் அந்த நோக்கத்தை மாற்றி இருக்கிறது.

ALSO READ:  மக்கள்தொகைக் கனக்கெடுப்பு பற்றி, மனதின் குரலில் பிரதமர் மோடி!

நேதாஜியின் நோக்கத்தின்படி, நாட்டின் இறையாண்மை மிகவும் முக்கியம். நாட்டின் இறையாண்மைக்கு அச்சுறுத்தல் விடுத்தால், இரட்டை வலிமையுடன் பதிலடி கொடுப்போம். நேதாஜி கண்ட கனவின்படி இந்தியா ராணுவத்தை உருவாக்கி வருகிறது, அதை நோக்கி நகர்கிறது என்று நான் கூறுவேன். நம்முடைய ராணுவத்தில் நவீன தொழில்நுட்பங்கள், நவீன ஆயுதங்கள், தளவாடங்கள் போன்றவை கலந்து உள்ளன. நம்முடைய ராணுவத்தின் வலிமை என்பது சுயபாதுகாப்புதான், இது எதிர்காலத்திலும் தொடர்ந்து இருக்கும்.

இந்தியா ஒருபோதும் மற்றவர்களின், மற்ற நாடுகளின் நிலத்தை ஆக்கிரமிக்கும் பேராசையுடன் செயல்பட்டது கிடையாது. அந்த எண்ணம் இந்தியர்களுக்கும், இந்தியாவுக்கும் இல்லை. கடந்த 4 ஆண்டுகளில் இந்தியாவின் பாதுகாப்பை வலுப்படுத்த பாஜக அரசு அதிகம் உழைத்துள்ளது, சர்ஜிகல் ஸ்ட்ரைக் போன்ற முடிவுகளை எடுக்கும் சக்தி இந்த அரசுக்கு மட்டுமே இருக்கிறது .

நேதாஜி அனைத்து மக்களுக்கும் சம உரிமை மற்றும் சம வாய்ப்பு அளிக்கப்படும் என உறுதி கொண்டு இருந்தார். முக்கியமாக வடகிழக்கு மற்றும் கிழக்கு மாநிலங்களுக்கு அங்கீகாரம் கிடைக்காததால் அவற்றின் மீது கவனம் செலுத்தினார். தற்போதைய பாஜக அரசும் அத்தகைய முயற்சிகளில் ஈடுபட்டு வருகின்றது

ALSO READ:  தமிழக பாஜகவுக்கு எந்த இஸம் சரியாக இருக்கும்?

இவ்வாறு பிரதமர் மோடி பேசினார்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

மதுரை டிவிஎஸ் நகர் கோதண்ட ராமர் கோவிலில் மகா சம்ப்ரோக்ஷணம்!

மதுரை மாவட்டம், பழங்காநத்தம் அருகே உள்ள டிவிஎஸ் நகர் பகுதியில் அமைந்துள்ள மதுரை டிவிஎஸ் குடும்பத்திற்கு சொந்தமான அருள்மிகு கோதண்ட ராமர் திருக்கோவிலில் அஷ்டபந்தன மகா கும்பாபிஷேக விழா வெகுவிமரிசையாக நடைபெற்றது.

பஞ்சாங்கம் – ஜூன் 24 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

பஞ்சாங்கம் ஜூன் 23 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

‘தவெக., இன்னுமொரு திமுக., தானா?’ திருப்பரங்குன்ற தீப நிலைப்பாட்டுக்கு இந்து முன்னணி கண்டனம்!

உயர்நீதிமன்றத்தின் மதுரை கிளை திருப்பரங்குன்றம் மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்றுவது தொடர்பாக வழங்கிய உத்தரவை அமல்படுத்துவதில், புதிதாக பதவி ஏற்றுள்ள தவெகவின் நிலைப்பாட்டை கேட்டிருந்தது. அது குறித்து இன்று தமிழக அரசு சார்பில் தாக்கல் செய்துள்ள பதில் மனுவில் குழப்பமான கருத்துக்களை தெரிவித்துள்ளது.

ஆர்.எஸ்.எஸ்., பதிவு செய்யப்பட்ட அமைப்பா?

ஆர் எஸ் எஸ் தனது பதிவு சான்றிதழைக் காட்ட வேண்டுமென கார்கே கேட்பது பொருள் அற்றது. ஆர் எஸ் எஸ் 100 ஆண்டுகளுக்கு மேலாக இந்த நாட்டில் செயல்பட்டுக் கொண்டிருக்கிறது. அதில் 75 ஆண்டுகள் இந்திய அரசமைப்பு சட்டத்திற்கு உட்பட்டது.

Topics

பஞ்சாங்கம் ஜூன் 22 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

பஞ்சாங்கம் ஜூன் 21 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

Entertainment News

Popular Categories