காட்டுக்குள் சென்ற இளம்பெண்! மனித விலங்குகளால் நேர்ந்த விபரீதம்!

இந்தியா கிரைம் நியூஸ் சற்றுமுன் பொது தகவல்கள்
forest 1 - 2026

ஆந்திரா மாநிலம் சித்திதூர் மாவட்டத்தைச் சேர்ந்தவர் கீதா(பெயர் மாற்றப்பட்டுள்ளது) வயது 20

சில மாதங்களுக்கு முன்புதான் திருமணம் நடந்துள்ளது. கீதா சமைப்பதற்கு விறகு தேடி அருகில் உள்ள காட்டு பகுதிக்கு சென்றுள்ளார்.

காட்டுக்குள் கீதா தனியாக சென்றதைக் கண்ட சில மனித மிருகங்கள் பாலியல் வன்கொடுமை செய்ய திட்டம் போட்டுள்ளனர்.

உடனே அவர்கள் கீதாவை பின் தொடர்ந்து சென்று பாட்டி இறந்துவிட்டதாகவும், நாங்களே உங்களை வீட்டுக்கு அழைத்து செல்வதாகவும் கூறி அப்பெண்ணை ரமேஷ் என்பவர் தனது பைக்கில் ஏற்றியுள்ளார்.

vankodumai 1 - 2026

மற்றொரு பைக்கில் விஜய், சிவா என்ற இளைஞர்கள் ரமேஷை பின் தொடர்ந்துள்ளனர். காட்டுக்குள் மறைவான இடத்திற்கு சென்ற அவர்கள் கீதாவை கீழே இறக்கி அவரது வாயில் துணியை வைத்து அடைத்து மூன்று பேரும் மாறி மாறி கூட்டு பாலியல் வன்கொடுமைக்கு ஆட்படுத்தி விட்டு அங்கிருந்து தப்பி சென்றுள்ளனர்.

அங்கிருந்து அழுதுகொண்டே வீட்டிற்கு வந்த கீதா நடந்த சம்பவம் குறித்து வீட்டில் கூறியுள்ளார். இதுகுறித்து கீதாவின் குடும்பத்தினர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்ததை அடுத்து ரமேஷ், விஜய், சிவா மூவரையும் கைது செய்து காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.