
இரயில் பயணிகள் கவனத்திற்கு … மீண்டும் தாம்பரம் -கொச்சுவேலி சிறப்பு ரயில்
ஆயுத பூஜை மற்றும் தீபாவளி பண்டிகை கால சிறப்பு ரயிலக தாம்பரம் திருவனந்தபுரம் மீண்டும் இயக்க படுகிறது.
தாம்பரம் – திருவனந்தபுரம் வடக்கு வண்டி எண்: 06035
தாம்பரம் புறப்பாடு வெள்ளி 19.30 அக்டோபர் 11 முதல் 27 டிசம்பர் வரை
திருவனந்தபுரம் வடக்கு – தாம்பரம்
வண்டி எண்:* 06036 ஞாயிறு
அக்டோபர் 13 முதல் 29 டிசம்பர் வரை
தாம்பரம் வருகை:* 07.35 திங்கள் 3 அடுக்கு ஏ/சி எக்கானமி பெட்டிகள் மட்டுமே உள்ளது.முன்பதிவில்லா பெட்டிகள் கிடையாது._
முழுவதும் குளிர்சாதன பெட்டிகள் கொண்டது.
முன்பு வாரம் இருமுறை கோடைகால சிறப்பு ரயிலாக இயங்கியது . பிறகு ஓணம் பண்டிகைக்கு மூன்று முறை இயங்கியது. தற்போது வாரம் ஒருமுறையாக இயங்கும்.
இந்த ரயிலை மீண்டும் இயக்க கேரளா எம்.பி கொடிகுன்றில் சுரேஷ் வலியுறுத்தி வந்தார். ரயில்வே அமைச்சர் வாரம் ஒருமுறை இயக்க ஒப்புதல் கூறினார். தற்போது அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த ரயிலை நிரந்தரமாக சாதாரண முன்பதிவு பெட்டிகள் மற்றும் முன்பதிவு இல்லாத சாதாரண ரயில் பெட்டிகள் இணைத்து இயக்க தமிழக கேரள ரயில் பயணிகள் வலியுறுத்தி வருகின்றனர்





