காக்கிநாடா கோட்டய்யா காஜாவுக்கு… தபால் துறை அரிய கௌரவம்!

அடடே... அப்படியா? இந்தியா சற்றுமுன் துணுக்குகள் லைஃப் ஸ்டைல்
kottaiaraja3 - 2026

காக்கிநாடா “கோட்டய்யா காஜா” என்ற இனிப்பு வகைக்கு அரிய கௌரவம் கிடைத்துள்ளது. காக்கிநாடா காஜாவுக்கு பாரத தபால்துறை கோட்டய்யா காஜா என்ற பெயரில் போஸ்டல் கவர் வெளியிட்டுள்ளது.

காக்கிநாடா என்றாலே பலருக்கும் முதலில் நினைவு வருவது காக்கிநாடா காஜா என்ற இனிப்பு வகையே! அதிலும் கோட்டய்யா காஜா என்பது இன்னும் சிறப்பான பெயர் பெற்ற இனிப்பு வகை.

இந்தப் பெருமை கடல் கடந்து பல கண்டங்களுக்கும் சென்றுள்ளது. வெளிநாடுகளில் இருக்கும் தெலுங்கு மக்கள் அனைவரிலும் காக்கிநாடா காஜாவின் ருசி அறியாதவர்களே இருக்க முடியாது.

அப்படிப்பட்ட காக்கிநாடா கோட்டய்யா காஜாவுக்கு அரிதான ஒரு கௌரவம் பாரததேசம் அளித்துள்ளது. பாரத தபால்துறை கோட்டய்யா காஜா மீது போஸ்டல் கவர் ரிலீஸ் செய்துள்ளது.

kottaiahkhaja1 - 2026

கிழக்கு கோதாவரி மாவட்டம் காக்கிநாடாவில் நடந்த ஒரு நிகழ்ச்சியில் இந்த போஸ்டல் கவரை ரிலீஸ் செய்தார்கள்.

காஜா என்ற இனிப்பு வகையில் பல விதங்கள் உள்ளன. கொட்டம் காஜா அதாவது குழாய் வடிவில் இருக்கும் காஜா, மடித்த காஜா, சிட்டி காஜா என்ற சின்ன சின்ன சைஸில் உள்ள காஜாக்கள் என்று பல ரகங்களில் உள்ளன. அனைத்தும் இனிப்பாக உள்ளவையே. அதிலும் கோட்டய்யா காஜாவுக்கு இருக்கும் சிறப்பே தனி. இவற்றை நெய் வனஸ்பதி யோடு சேர்த்து தயார் செய்கிறார்கள்.

காஜாவை விரும்பி உண்பவர்கள் அதில் இருக்கும் சர்க்கரை பாகு வாயில் இனிப்பாக வழிவதை நினைத்தாலே இனிக்கும். அந்த ருசி அதனைத் தின்பவர்களுக்கு மட்டுமே தெரியும்.

kottaiahkhaja - 2026

கோட்டய்யா என்பவர் முதலில் இவற்றை தயார் செய்ததால் இதற்கு கோட்டய்யா காஜா என்று பெயர் வந்தது. அதன் பின் பிறர் கூட இதைப் போன்றவற்றை தயார் செய்தாலும் காக்கிநாடா கோட்டைய்யா காஜாவுக்கு இருக்கும் தனிச்சிறப்பு தனிதான்.

காக்கிநாடாவில் மட்டுமே அல்ல. தெலுங்கு மாநிலங்களில் பல இடங்களில் இதுபோன்று ‘கொட்டம்’ காஜாக்கள் கிடைக்கின்றன. ஸ்வீட்ஸ் என்றால் விரும்பி உண்பவர்கள் நிச்சயம் இவற்றை அறிந்தே இருப்பார்கள்.

அதற்காகவே போஸ்டல் டிபார்ட்மெண்ட் கூட கோட்டய்யா காஜாவுக்கு இருக்கும் இந்த சிறப்பை மனதில் இருத்தி அதே பெயரில் போஸ்டல் கவரை ரிலீஸ் செய்துள்ளது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.