வித்தியாசமான கோயில்! அதுவும் சுடுகாட்டில்! யாருக்குத் தெரியுமா?

உள்ளூர் செய்திகள் சற்றுமுன் திருச்சி லைஃப் ஸ்டைல்
oyamari sudukadu - 2026

காவிரியின் தென்கரையிலுள்ள ஓயாமரி சுடுகாடு திருச்சியின் அடையாளங்களில் ஒன்று. “ஓயாமல்” இடைவிடாது பிணங்கள் தொடர்ந்து எரிக்கப்பட்டு கொண்டிருப்பதால் “ஓயாமரி” என்று பெயர்.

இந்த சுடுகாட்டில் அரிச்சந்திரனுக்கு கோயில் உண்டு. பின்புலத்தில் பிணம் எரிந்து கொண்டிருந்தாலும், கோயிலுக்கு குழந்தைகள், பெண்கள் உள்ளிட்ட பொதுமக்கள் சாதாரணமாக வந்து செல்வதைக் காணலாம்.

oyamari sudukadu1 - 2026

முன்னர், அரிச்சந்திரனுக்கு சுடுகாட்டு சுவருக்கு வெளியே ஒரு சிறு சிலை இருந்தது .. உள்ளே இல்லை! மேலும், முன்பெல்லாம் சுடுகாட்டின் உள்ளே எந்த வித வழிபாடும் இருந்ததில்லை ..

oyamari sudukadu2 - 2026

அரிச்சந்திரன் கோவிலுக்கும் பின் உள்ள தகன கொட்டகைக்கும் இடையே சுவர் ஏதும் இல்லை. மேலும், சாலை ஓரம் உள்ள காம்பவுண்டு சுவர் சுடுகாட்டையும் கோயிலையும் உள்ளடக்கியதாக தான் உள்ளது.

  • தகவல்: மு. ராம்குமார்

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.