பாரீஸிலிருந்து, பாகிஸ்தானை நோக்கி பயணித்த விமானத்தில், பெண் பயணி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது
பாகிஸ்தானின் சர்வதேச விமானம், பிரான்ஸ் தலைநகரான பாரிஸிலிருந்து புறப்பட்டது. விமானம் நடுவானில் சென்றுகொண்டிருந்தபோது, ஒரு பெண் பயணிக்கு திடீரென்று மாரடைப்பு ஏற்பட்டது.
அதன் பின்பு அவருக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது. அதனையடுத்து, விமானி உடனடியாக விமானத்தை பல்கேரியாவில் தரையிறக்கினார்.
அங்கு, அந்தப் பெண்ணிற்கு சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது. ஆனால், எதிர்பாராதவிதமாக சிகிச்சை பலனளிக்காமல் அந்த பெண் பரிதாபமாக உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதனையடுத்து, விமானம் மீண்டும் புறப்பட்டு சென்றது.