கனடாவில் ஒரு பெண் இரவு நேரத்தில் தூங்கி கொண்டிருந்த சமயத்தில் திடீரென்று வீட்டின் கூரையை உடைத்துக்கொண்டு விண்கல் விழுந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.
கனடாவில் இருக்கும் பிரிட்டிஷ் கொலம்பியா மாகாணத்தை சேர்ந்த ஒரு பெண், இரவில் தன் வீட்டில் தூங்கிக் கொண்டிருந்திருக்கிறார்.
அப்போது காலை சுமார் 4 மணிக்கு திடீரென்று வீட்டின் கூரையை உடைத்துக்கொண்டு படுக்கையில் இருந்த தலையணை மேல் மிகப்பெரிய விண்கல் விழுந்திருக்கிறது.
அந்த மிகப்பெரிய கல்லானது, அந்தப் பெண் படுத்திருந்த இடத்திற்கு சில அடிகள் தூரத்தில் விழுந்திருக்கிறது. எனவே, அந்த பெண் அதிர்ஷ்டவசமாக உயிர் பிழைத்திருக்கிறார்.
மேலும், விண்கல் விழுந்தபோது அதிக சத்தம் மற்றும் புகை மூட்டமாக இருந்துள்ளது. இதனால், அப்பகுதியை சேர்ந்த மக்கள் பதறிப்போய் விழித்து கொண்டதாக கூறியுள்ளனர்.
இது தொடர்பில் அந்த பெண் தெரிவித்துள்ளதாவது, முதலில் என்ன நிகழ்ந்தது என்றே எனக்கு தெரியவில்லை. திடீரென்று பயங்கர சத்தம் கேட்டது.
எனவே படுக்கையிலிருந்து எழுந்து பார்த்த போது, மிகப்பெரிய கல் விழுந்து கிடப்பதை கண்டு அதிர்ந்து போனேன். அதன்பின்பு, அங்கிருந்த மக்கள் அவசர உதவி குழுவினருக்கு தொடர்புகொண்டு விண்கல் எப்படி விழுந்தது? என்று கண்டறிய முயற்சி செய்தனர்.
விசாரணைக்கு பின்பு, அந்தக் கல் விண்வெளியிலிருந்து விழுந்தது உறுதி செய்யப்பட்டுள்ளது