70 வயதில் பஞ்சாயத்து தலைவர்! ஓய்வு பெற்ற தலைமை ஆசிரியரின் சாதனை!

Published:

karur news panchayat leader - 2026

70 வயதில் பஞ்சாயத்து தலைவராக பதவி ஏற்றுக் கொண்ட ஓய்வு பெற்ற தலைமை ஆசிரியர்

கரூர் அருகே ஒய்வு பெற்ற தலைமை ஆசிரியர் ஒருவர் மரக்கன்றுகளையும், முருங்கை விதைகளையும் மக்களுக்கு கொடுத்து பஞ்சாயத்து தலைவராக பதவி ஏற்றுக் கொண்ட நிகழ்வு மிகவும் சுவாரஸ்யத்தினை ஏற்படுத்தியுள்ளது. இது குறித்து அவர் கூறியபோது, தமிழக அளவில் அந்த கிராமத்தினை முன்மாதிரியான கிராமமாக மாற்ற முன்வருவேன் என்று கூறினார்.

கரூர் மாவட்டம், கடவூர் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட வரவனை பஞ்சாயத்து தலைவராக தற்போது பொறுப்பேற்றுள்ளவர் எம்.கந்தசாமி! ஓய்வு பெற்ற தலைமை ஆசிரியரான இவர் 70 வயதிலும் மக்களுக்கு சேவை செய்ய அவருக்கு மக்களே அழைப்பு விட்ட நிலையில், திடீரென்று பஞ்சாயத்து தலைவர் பதவிக்கு போட்டியிட்டார்.

இவருடன் சேர்த்து 6 வேட்பாளர்கள் களத்தில் இருந்த நிலையில், இவரிடம் அப்பகுதியில் படித்த மாணவர்கள் இவருக்காக வாக்குகள் சேகரிக்கும் பணியில் ஈடுபட்டு இவரை 206 வாக்குகள் வித்யாசத்தில் 1174 வாக்குகள் பெற்று வெற்றி பெற வைத்தனர்.

இந்நிலையில், இவரது பதவி ஏற்பு விழா சுண்டுகுளிப்பட்டி பகுதியில் உள்ள வரவனை ஊராட்சி மன்ற அலுவலகத்தில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் முருங்கை கன்றுகளையும் மரக்கன்றுகளையும் அனைவருக்கும் கொடுத்து வித்யாசமான முறையில் அவர் பதவி ஏற்றுக் கொண்டார்.

ALSO READ:  பிரபல பின்னணி பாடகி எஸ்.ஜானகி மைசூரில் காலமானார்!

தேர்தல் அதிகாரியும், வேளாண் துறை அதிகாரியுமான ராஜேஸ்குமார் இவருக்கு பதவி ஏற்பு நிகழ்த்தி வைத்தார். ஊராட்சி மன்ற செயலாளர் ஆர்.வீராசாமி, அப்பகுதி பொதுமக்கள் என்று ஏராளமானோர் கலந்து கொண்டு ஒய்வு பெற்ற தலைமை ஆசிரியரும், பஞ்சாயத்து தலைவருமான எம்.கந்தசாமியை வாழ்த்தினர்!

வரும் காலத்தில் தமிழக அளவில் வரவனை கிராமத்தினை முன்மாதிரி கிராமமாக்குவது தான் தனது லட்சியம் என்ற அவர், ஆங்காங்கே வசிக்கும் கிராம மக்கள் வீடுகள் தோறும், முருங்கை மரங்களும், பழ மரங்களும் நட்டு அவர்கள் ஒவ்வொருவரையும் விவசாயியாக மாற்றுவது தான் லட்சியம் என்றார்.

ஆங்காங்கே வெடி வைத்தும், பிளக்ஸ் பேனர்கள் வைத்தும், கிடா விருந்து வைத்தும் பதவி ஏற்கும் பஞ்சாயத்து தலைவர்கள் மத்தியில், மரக்கன்றுகளையும், முருங்கை விதைகளையும் கொடுத்து ஒவ்வொரு வீட்டிலும் விவசாய புரட்சிக்கு வித்திட்ட ஓய்வு பெற்ற தலைமை ஆசிரியரின் இந்த பதவி ஏற்பு நிகழ்ச்சி அனைவரையும் கவர்ந்தது.

Related articles

Recent articles

spot_img