தர்பார் படத்தை மலேசியாவில் திரையிட சென்னை உயர் நீதிமன்றம் தடை!

சற்றுமுன் சினி நியூஸ் லைஃப் ஸ்டைல்
darbar - 2026

ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகியுள்ள தர்பார் படத்தை, மலேசியாவில் வெளியிட தடை விதித்து, சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

தர்பார் படம், ஜனவரி 9ஆம் தேதி வெளியாகிறது,. இந்த நிலையில் அந்தப் படத்திற்கு தடைவிதிக்க கோரி, மலேசியாவை சேர்ந்த டி.எம்.ஒய். கிரியேசன்ஸ் நிறுவனம், சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது.

அந்த நிறுவனம் அளித்த புகார் மனுவில் ரஜினிகாந்த் ஏற்கனவே நடித்து வெளியான 2.O படத்திற்காக, லைக்கா நிறுவனம் தங்களிடம் வாங்கிய 12 கோடி ரூபாயை திருப்பித் தரவில்லை என குறிப்பிட்டிருந்தது.

கடன் தொகையை வட்டியுடன் சேர்த்து, 23 கோடியே 70 லட்சம் ரூபாயாக வழங்க வேண்டும், எனவும் அதுவரை தர்பார் படத்தை வெளியிட தடை விதிக்க வேண்டும், எனவும் கோரியது.

இந்த வழக்கை விசாரித்த நீதிபதி, தர்பார் படத்தை மலேசியாவில் மட்டும் வெளியிட தடை விதித்து உத்தரவிட்டார்.

டி.எம்.ஒய். கிரியேஷன்ஸ் நிறுவனத்திற்கு, 4 கோடியே 90 ஆயிரம் ரூபாயை செலுத்தும் பட்சத்தில் ஜனவரி 9ஆம் தேதியே தர்பார் படத்தை மலேசியாவிலும் வெளியிடலாம் எனவும் நீதிபதி குறிப்பிட்டார்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.