ஐயாம் ஜஸ்ட் லிமிடட் எடிஷன்… வைரலாகும் ஷம்மு ஷாலு படம்!

Published:

shalushammu1 horz - 2026

“ஐயாம் ஜஸ்ட் லிமிட்டட் எடிசன்” – என புகைப்படத்தை வெளியிட்டார் நடிகை ஷாலு ஷம்மு..!

வருத்தப்படாத வாலிபர் சங்கம் படத்தில் திவ்யாவிற்கு தோழியாக நடித்து புகழ்பெற்றவர் ஷம்மு ஷாலு. அதன் பின்னர் சில படங்களில் நடித்தார். இருந்தாலும் அதில் அவர் நடித்த அந்த ஹோம்லி லுக் தான் பலரது நினைவுக்கும் வரும்.

shalushammu1 - 2026

அண்மைக் காலமாக ஷாலு நண்பர்களுடன் பார்ட்டியில் கலந்து கொள்வது, பேஸ்புக், ட்விட்டர், இன்ஸ்டாகிராம் என ஏகத்துக்கும் படங்களை வெளியிட்டு அவ்வப்பொழுது ட்ரெண்ட் ஆக்கி வருகிறார்.

வருத்தப்படாத வாலிபர் சங்கம் பட வெற்றிக்குப் பிறகு இவருக்கு சினிமா வாய்ப்புகள் வந்து கொண்டிருந்தது. அதன் தொடர்ச்சியாக தமிழுக்கு எண் ஒன்றை அழுத்தவும் படத்தில் நடித்திருந்தார். அண்மையில் கூட சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவான மிஸ்டர் லோக்கல் படத்திலும் நடித்திருந்தார்.

ஷம்மு ஷாலு தற்போது சமூக வலைத் தளப் பக்கங்களில் அடிக்கடி கவர்ச்சியான போட்டோக்களையும் வீடியோக்களையும் வெளியிட்டு வருகிறார். தற்போது தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஒரு படத்தை வெளியிட்டு “ஐயாம் நாட் ஸ்பெஷல், ஐயம் ஜஸ்ட் லிமிடெட் எடிஷன்” என குறிப்பிட்டுள்ளார்.

ALSO READ:  தாம்பரம் - தென்காசி பகல் நேர ரயிலை தினசரி ரயிலாக அறிவிக்க கோரிக்கை!

Related articles

Recent articles

spot_img