1653448150400 1 - 2026

தக்காளியின் விலை மீண்டும் உச்சியில் ..

சற்றுமுன்

வரத்து குறைவால் தக்காளியின் விலை மீண்டும் உச்சியில் சென்றுள்ளது.இன்று கிலோவிற்கு 15 ரூபாய் வரை உயர்ந்துள்ளது.

சென்னை கோயம்பேடு சந்தையில் நேற்று முன் தினம் 50 முதல் 55 ரூபாய் வரை விற்பனை செய்யப்பட்டு வந்த தக்காளியின் விலை 15 ரூபாய் வரை அதிகரித்துள்ளது. அதன்படி, ஒரு கிலோ நாட்டுத்தக்காளி 70 ரூபாய்க்கும், நவீன் தக்காளி 75 ரூபாய்க்கும் விற்பனையாகிறது. ஒட்டன்சத்திரம் காய்கனி சந்தை உழவர் சந்தைகளிலும் தக்காளி விலை இன்று கணிசமாக உயர்ந்துள்ளது.

ஒருகிலோ வெங்காயம் 18 ரூபாய்க்கும், சின்ன வெங்காயம் 45 ரூபாய்க்கும், உருளைக்கிழங்கு 34 ரூபாய்க்கும் விற்பனையாகிறது. ஊட்டி கேரட் அதிகபட்சமாக 40 ரூபாய்க்கும், பீன்ஸ் 80 ரூபாய்க்கும், பீட்ரூட் 50 ரூபாய்க்கும் முட்டைகோஸ் மற்றும் கத்தரிக்காய் தலா 35 ரூபாய்க்கும், வெண்டைக்காய் 40 ரூபாய்க்கும், விற்பனை செய்யப்பட்டு வருகிறது.எலுமிச்சை கிலோ ரூ150முதல் 180வரை விற்பனை யானது.

1653448150400 1 - 2026

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.