குஷியில் ஆர் ஜே பாலாஜி! முக்காவாசி முடிச்சாச்சாம் மூக்குத்தி அம்மன்!

சினி நியூஸ் சினிமா
mukuthiamman - 2026

மூக்குத்தி அம்மன் படத்தின் முதல் பாதி ஷூட்டிங்யை முடித்து விட்டார் ஆர்.ஜே.பாலாஜி.

தான் முதன் முதலில் நடித்து அறிமுகமான எல்.கே.ஜி படத்திற்கு பிறகு இயக்குவதாக அறிவித்தப்படம் மூக்குத்தி அம்மன். இப்படத்தை சரவணன் என்ற மற்றுமொரு இயக்குனர் பாலாஜி உடன் இணைந்து இயக்கியிருக்கிறார்.

படத்தில் பாலாஜி மற்றும் நயன்தாரா நடிக்கின்றனர். வேல்ஸ் நிறுவனம் இப்படத்தை தயாரிக்கிறது. படத்தில் மூத்த நடிகர் மெளலி மற்றும் ஊர்வசி ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர்.

மேயாத மான் படத்தில் நடித்த இந்துஜா இப்படத்தில் ஒரு கேஸ்ட் ஆப்பியரன்ஸில் நடிக்கிறார். கடந்த சில வாரங்களுக்கு முன்பு இப்படத்தின் படப்பிடிப்பு கன்னியாகுமரியில் காட்சியாக்கப்பட்டது.

mukuthi amman 2 - 2026

தற்போது கிடைத்துள்ள ஒரு தகவலின் படி படத்தின் முதல் பாதி ஷூட்டிங் முடிந்துவிட்டதாகவும் இதனை கன்னியாகுமரி மற்றும் நாகர்கோவில் சுற்றுவட்டாரப் பகுதிகளில் இரவு பகல் பாராமல் 44 நாட்களில் முடித்ததாகவும் பாலாஜி தனது சமுக வலைதளத்தில் தெரிவித்துள்ளார்.

மேலும் படத்தின் 90 சதவீத படப்பிடிப்பு முடிந்து விட்டதாகவும்.மேலும் சில முக்கிய காட்சிகள் மட்டுமே படமாக்க உள்ளதாகவும், மற்றும் படம் எடுக்கும் போது ஒத்துழைப்பு தந்த கன்னியாகுமரி மக்களுக்கு நன்றி என்றும் நயன்தாரா இந்த நாட்களில் நடித்து இதனை நினைவில் கைத்து கொள்ளும் படி மாற்றினர் என்றும் பாலாஜி தெரிவித்திருக்கிறார்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.