பொங்கல் வருது… பூக்கள் விலை கிடுகிடு உயர்வு!

சற்றுமுன் தமிழகம் லைஃப் ஸ்டைல் வணிகம்
flower market - 2026

பொங்கல் பண்டிகை நெருங்கி வருவதை முன்னிட்டு பூக்களின் விலை எக்கச்சக்கமாய் உயர்ந்துவருகிறது.

மதுரை மாவட்டம் உசிலம்பட்டி மலர் சந்தையில் ஒரு கிலோ மல்லிகைப்பூவின் விலை நான்காயிரம் ரூபாயை தொட்டுள்ளது.

கடும் பனிப்பொழிவால் மல்லிகைப்பூக்களின் மகசூல் சரிந்து, அதன் வரத்தும் குறைந்தது. இதனால், கடந்த சில நாட்களுக்கு முன்பு 2 ஆயிரம் ரூபாய்க்கு விற்பனையான ஒரு கிலோ மல்லி படிப்படியாக உயர்ந்து இன்று காலை நிலவரப்படி ரூபாய் நான்காயிரத்தை தொட்டுள்ளது.

ஆயிரம் ரூபாய்க்கு விற்பனையான முல்லை ஆயிரத்து 300 ரூபாய்க்கும், 600 ரூபாய்க்கு விற்பனையான பிச்சி 800 ரூபாய்க்கும் விற்பனையாகிறது.

அதேபோன்று காக்கிரட்டான் கிலோ ஆயிரம் ரூபாய்க்கும், செவ்வந்தி 200 ரூபாய்க்கும், ரோஜா 180 ரூபாய்க்கும் விற்பனையாகிறது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.