தேவிபட்டினத்தில் அதிர்ச்சி! சதித்திட்டம் தீட்டிய பயங்கரவாதிகள்!

சற்றுமுன் தமிழகம் மதுரை லைஃப் ஸ்டைல்
isis terrorist - 2026
File picture

தேவிபட்டினத்தில் 3 பயங்கரவாதிகள் கைது செய்யப்பட்டுள்ளனர் அவர்கள் சதித்திட்டம் தீட்டியது அம்பலம் ஆகியுள்ளது.

ராமநாதபுரம் மாவட்டம் தேவிபட்டினம் பகுதியில் பயங்கரவாத செயல்களுக்கு திட்டம் தீட்டிய 3 பயங்கரவாதிகளை போலீசார் கைது செய்தனர். ஒருவர் தப்பி ஓடிவிட்டார்.

தேவிப்பட்டினம் போலீசாருக்கு கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில் எஸ்.ஐ., ஜெகதீஸ்வரன் தலைமையிலான போலீசார், தேவிப்பட்டினம் புஹாரியா பள்ளி விளையாட்டு மைதானத்தில் பேசிக்கொண்டிருந்த 4 பேரை பிடிக்க முயன்றனர். ஒருவர் தப்பி ஓடி விட்டார். மூவரை கைது செய்தனர்.

அவர்கள் ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை அருகே கும்பிடுமதுரை, பெரியபாளையம் தெருவைசேர்ந்த புறாக்கனி என்ற பிச்சைக்கனி 45, கடலுார் மாவட்டம் கோண்டூர் காலனி முகமது அலி என்ற மணிகண்டன் 28, விழுப்புரம் மாவட்டம் கிருஷ்ணாபுரம் முகமது அமீர் என்ற அருண்குமார் 31, என்பதும் தப்பி ஓடியவர் தேவிபட்டினம் சேக்தாவூது என்பதும் தெரிய வந்தது.

சிக்கியவர்களிடம் விசாரித்ததில், கன்னியாகுமரி மாவட்டம் களியக்காவிளையில் எஸ்.ஐ., வில்சன் கொலையில் தொடர்புடைய அப்துல் சமீமிற்கு பண பரிமாற்றம் செய்தது குறித்தும், அதற்கு கீழக்கரையை சேர்ந்த இலங்கை நபர் முகமது ரிபாஸ் உதவியதும் தெரிய வந்தது.

தேவிபட்டினம் பகுதி இளைஞர்களை ஜனநாயகத்திற்கு எதிரான செயல்களில் ஈடுபட வைக்கவும், அவர்களுக்கு தேவிப்பட்டினம், கீழதில்லையேந்தல் மதரசாக்களில் பயிற்சி அளிக்கவும் திட்டமிட்டு இருந்தனர். அவர்களிடம் ஜிகாத், ஜனநாயகம் ஒரு குப்பர் என்ற புத்தகங்கள் இருந்தன.
அவர்களிடமிருந்த 3 அலைபேசிகளை போலீசார் ஆய்வு செய்தனர்.

அதில் முகமது அலி அலைபேசியில் சில அமைப்புகளை திட்டி பதிவு செய்துள்ளனர். அரசியல் தலைவர்கள் பற்றி அவதுாறாக வாட்ஸ் ஆப் குழுக்களில் பதிவு செய்துள்ளனர்.

இளைஞர்களுக்கு பயிற்சியளித்து ஐ.எஸ்.ஐ.எஸ்., அமைப்பில் உறுப்பினராக சேர்ப்பது. பண உதவி செய்வது. நாங்கள் சாக வேண்டும் என நினைத்தால் பல பேரை சாகடிப்போம். யாருக்கும் பயப்பட வேண்டியதில்லை. இளைஞர்களையும், சிறார்களையும் மூளைச்சலவை செய்து தேசத்திற்கு எதிரான குற்றங்களை செய்வதற்காக தயார் செய்வது குறித்த எஸ்.எம்.எஸ்.,கள் இருந்தன.

ஜிகாத்திற்கு எதிரானவர்களை கூலிப் படைகள் மூலம் கொலை செய்வது போன்ற திட்டங்களை தீட்டியுள்ளதும், தெரிய வந்தது.

ஐஎஸ்ஐஎஸ் இயக்கம் குறித்த தகவல்கள் பரவியபோது தொடக்கத்தில் ராமநாதபுரம் பகுதியில்தான் அந்த அமைப்பின் கரு பொறிக்கப்பட்ட டீ-ஷர்ட்டை அணிந்துகொண்டு இளைஞர்கள் போட்டோவுக்கு போஸ் கொடுத்தனர் அது அப்போது வைரலானது அதைத்தொடர்ந்து ராமநாதபுரம் பகுதியில் பயங்கரவாத பாதைக்கு இளைஞர்கள் செல்வதை தடுப்பதற்கு போலீசார் பெரும் முயற்சி எடுத்தனர் இருப்பினும் ராமநாதபுரம் கீழக்கரை ராமேஸ்வரம் உள்ளிட்ட பகுதிகளில் இஸ்லாமிய இளைஞர்களை குறி வைத்து பயங்கரவாத இயக்கத்தினர் மூளைச்சலவை செய்யும் வேலைகளில் ஈடுபட்டு வருவதும் அவர்கள் இதற்கு இரை யாவதும் இஸ்லாமிய சமூகத்தினர் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.