பெரியாரை தூக்கி பிடிக்க நினைத்தால் அதிமுக., இந்து வாக்கு வங்கியை இழக்க நேரிடும்!

உள்ளூர் செய்திகள் சற்றுமுன் தமிழகம் நெல்லை
IMG 20200124 WA0007 - 2026

திருநெல்வேலியில் பத்திரிக்கையாளர்களை இந்து முன்னணி மாநில துணைத் தலைவர் விபி ஜெயக்குமார் சந்தித்து பேசினார்.
அப்போது மாநில செயலாளர் குற்றாலநாதன், மாவட்ட பொதுச் செயலாளர் பிரம்மநாயகம், மாவட்ட செயலாளர்கள் சிவா மற்றும் சுடலை, மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் இசக்கி முத்து மற்றும் நமசிவாயம் ஆகியோர் உடன் இருந்தனர்.

இந்துமுன்னணி மாநில துணைத்தலைவர் த.V.P.ஜெயக்குமார் செய்தியாளர்கள் சந்திப்பில் கூறியவை

தந்தை பெரியாரின் கருத்துகள் கோபுரத்தில் வைக்க வேண்டியவை என்று தமிழக துணை முதல்வர் திரு. ஒ.பன்னீர்செல்வம் அவர்கள் கூறியுள்ளது மிகுந்த வருத்தத்திற்குரியது. இந்துமுன்னணி இதற்கு கண்டனம் தெரிவிக்கிறது

இந்து தெய்வங்களையும் இந்து மரபுகளையும் ஈ.வே.ரா அசிங்கமாக விமர்சித்தார்

சபரிமலை கோவிலுக்கு மாலை போட்டு தரிசனம் செய்து வந்த துணைமுதல்வர் சுவாமி ஐயப்பன் குறித்த ஈ.வே.ரா விமர்சத்தை கோபுரத்தில் வைக்க சொல்கிறாரா ?

அவரை தொடர்ந்து அதிமுக அமைச்சர்கள் திரு.ஜெயக்குமார் திரு.உதயகுமார் திரு செங்கோட்டையன் ஆகியோரும் வழிமொழிந்துள்ளனர்.

ஈ.வே.ரா வின் எந்த கொள்கை கோபுரத்தில் வைக்கும் அளவுக்கு தகுதியானது

வளர்ப்பு மகளை திருமணம் செய்ததையா?

70 வயதில் 25 வயது இளம் பெண்ணை மணந்ததையா ?

அடுத்தவர் மனைவியை அபகரிக்கலாம் என தீர்மானம் போட்டதையா ?

தமிழ் மொழியை காட்டுமிராண்டி மொழியென்று சொன்னதையா..?_

தமிழர்கள் காட்டுமிராண்டிகள் என்று சொன்னதையா..?_

இந்திய சுதந்திர தினம் எங்களின் “துக்க தினம்” என்று சொன்னதையா..?

கிருத்துவர்களே இந்தியாவை ஆளவேண்டும் என்று சொன்னதையா..?

நடுரோட்டில் அடுத்த வீட்டு பெண்களின் தாலியை அறுப்பதையா..?_

கணவன் ரெண்டு வைப்பாட்டியை வெச்சிக்கிட்டா, மனைவி நான்கு ஆசை நாயகர்களை வைத்துக் கொள்ள வேண்டும் என்று சொன்னதையா..?_
.
தீபாவளி என்கிற சனியன் போயிடுச்சேன்னு பார்த்தா, அதுக்குள்ள கார்த்திகை தீபம் என்கிற அடுத்த சனியன் வந்துடுச்சி என்று சொன்னதையா..?

குறிப்பிட்ட சாதி பெண்கள் ரவிக்கை அணிவதால் துணி விலை ஏறிவிட்டது என்று பேசியதையா ?

கடவுளை கற்பித்தவன் முட்டாள், கடவுளை வணங்குகிறவன் காட்டுமிராண்டி என்று சொன்னதையா ?

இந்த கருத்துகளில் எதை கொண்டுபோய் கோபுரத்தில் வைக்க வேண்டும்

பெரியாரை தூக்கி பிடிக்க நினைத்தால் அதிமுக இந்து வாக்கு வங்கியை இழக்க நேரிடும்… என்றார்

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.