அக்‌ஷய் குமாருடன், தனுஷ் நடிக்கும் ‘அட்ரங்கி ரே’! அறிவிப்பு வெளியானது!

சினி நியூஸ் சினிமா
akshai - 2026

தனுஷ், அக்‌ஷய்குமார் நடிக்கும் இந்திப் படத்தின் அறிவிப்பு அதிகாரபூர்வமாக இன்று வெளியாகியுள்ளது.

இந்தியில் ‘தனு வெட்ஸ் மனு’ உட்பட சில படங்களை இயக்கிய ஆனந்த் எல் ராய், தனுஷ் நடித்த ரான்ஜ்னா என்ற படத்தையும் இயக்கி இருந்தார்.

akshai 2 - 2026

இதையடுத்து தனுஷ் நடிப்பில் மீண்டும் ஒரு படத்தை இயக்க இருக்கிறார் என்று செய்திகள் வெளியாயின. ஆனால் உறுதிப்படுத்தப்படவில்லை.

இந்தப் படத்தில் சாரா அலிகான், தனுஷ் ஜோடியாக நடிக்கிறார் என்றும் அக்‌ஷய்குமார் முக்கிய வேடத்தில் நடிக்கிறார் என்றும் காதல் கதையை கொண்ட படமான இது பற்றிய அதிகாரபூர்வ தகவல் விரைவில் வெளியாகும் என்று கூறப்பட்டது. இந்நிலையில், இந்தப் படத்தின் அறிவிப்பு இன்று வெளியாகியுள்ளது.

akshai 1 - 2026

இந்தப் படத்துக்காக, தனுஷ், அக்‌ஷய்குமார், சாரா அலிகான் ஆகியோர் சேர்ந்து எடுத்துள்ள புகைப்படங்களும் இணையத்தில் வைரலாகியுள்ளன. அந்தப் புகைப்படங்களில் ஒன்றில் தனுஷும் அக்‌ஷய்குமாரும் சாரா அலிகானுக்கு முத்தம் கொடுத்தபடி உள்ளனர். மற்ற புகைப்படங்களில் ஒருவரையொருவர் கட்டிப்பிடித்தபடி உள்ளனர்.

இந்தப் படத்துக்கு ஏ.அர்.ரகுமான் இசை அமைக்கிறார். பூஷன்குமார் தயாரிக்கும் இந்தப் படத்துக்கு ஹிமன்ஷு சர்மா கதை எழுதியுள்ளார். ஷூட்டிங் வரும் மார்ச் மாதம் 1 ஆம் தேதி தொடங்குகிறது. படத்துக்கு, அட்ரங்கி ரே (Atrangi Re) என்று டைட்டில் வைத்துள்ளனர்.

akshai kumar - 2026

இதில் நடிக்க அக்‌ஷய்குமார் ரூ.120 கோடி சம்பளம் கேட்டுள்ளதாகக் கூறப்பட்டது. பாலிவுட்டில் அக்‌ஷய்குமார் நடித்துள்ள பெரும்பாலான படங்கள் தொடர்ந்து வசூலை வாரிக் குவித்து வருகின்றன. அவரது படங்களின் டிஜிட்டல் மற்றும் சேனல் உரிமங்களை பெறவும் நிறுவனங்களுக்கு இடையே கடும் போட்டி நிலவுகிறது. இதனால் அவரது சம்பளம் உயர்ந்துள்ளதாகக் கூறப்பட்டது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.