திருப்பதி ஹாதிராம்ஜி மட நிலம் தொடர்பில்… அரசு முக்கிய முடிவு!

இந்தியா சற்றுமுன் லைஃப் ஸ்டைல்
tirumala ramji mutt - 2026

திருப்பதி ஹாத்திராம்ஜி மடத்தின் நிலங்கள் தொடர்பாக ஆந்திர அரசாங்கம் முக்கிய தீர்மானம் எடுத்துள்ளது. மடத்தின் நிலங்களை முறைகேடாக பயன்படுத்துகிறார்கள் என்று குற்றச்சாட்டு எழுந்ததைத் தொடர்ந்து, ஹாத்திராம்ஜி மடத்தின் மஹந்த் அர்ஜுன்தாஸுக்கு பதவிநீக்க உத்தரவைக் கொடுத்துள்ளது அரசு. மேலும், ஸ்ரீகாளஹஸ்தி ஆலய செயல் அலுவலருக்கு கூடுதல் பொறுப்புகள் வழங்கப் பட்டுள்ளன.

திருப்பதியில் உள்ள ஹாத்திராம்ஜி மடத்து நிலங்கள் தொடர்பான விவகாரத்தில் ஆந்திர அரசாங்கம் முக்கியமான முடிவெடுத்துள்ளது. மடத்து நிலங்களை தவறாக பயன்படுத்துகிறார்கள் என்று மடத்தின் மஹந்த் அர்ஜுன் தாஸ் மீது சஸ்பென்ஷன் ஆர்டர் கொடுத்துள்ளது ஆந்திர அரசு.

ஸ்ரீகாளகஸ்தி செயல் அலுவலரை கூடுதல் பொறுப்புகள் எடுத்துக்கொள்ள வேண்டுமென்று ஆணையிட்டுள்ளது. ஹாதிராம்ஜி மட நிலங்களின் அக்கிரமங்களை பற்றி அண்மையில் வருவாய்த்துறை தீவிரமாகக் கண்டித்தது. உப்பரபல்லியில் சுமார் 50க்கு மேற்பட்ட முறைகேடாகக் கட்டப்பட்டுள்ள கட்டடங்களை ஜெசிபி இயந்திரங்களைக் கொண்டு ஊழியர்கள் இடித்துத் தள்ளினார்கள்.

tirupathi ramjimutt land - 2026

இந்த வரிசையில் பல கட்சிகள் அரசியல் கட்சிகளின் தலைவர்கள் அதிகாரிகளின் மீது தீவிரமான அழுத்தம் கூட எடுத்து வந்தார்கள். திருப்பதியில் ஹாதிராம்ஜி மடத்திற்கு நூற்றுக்கணக்கான ஏக்கர் நிலங்கள் உள்ளன.

குறைந்த விலைக்கே கிடைக்கின்றது என்று சிலர் மடத்தின் நிலங்களை வாங்கினார்கள். மடத்தின் நிலங்களில் ரியல் எஸ்டேட் வியாபாரம் நடக்கிறது என்று குற்றச்சாட்டுகள் எழுந்தன.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.