மழை வேண்டி தீர்த்த கலச பூஜை; அம்மனுக்கு அபிஷேகம் செய்த பெண்கள்!

ஆன்மிகச் செய்திகள் ஆன்மிகம் சற்றுமுன் திருச்சி லைஃப் ஸ்டைல் விழாக்கள் விசேஷங்கள்

thiruppur sakthi temple - 2026

திருப்பூரில் கொங்கு மெயின் ரோடு பிரிஜ்வே காலனி பகுதியில் அமைந்திருக்கும் பிரசிச்தி பெற்ற அருள்மிகு ஒம் சக்தி ஆலயத்தில் மழை வேண்டி தீர்த்த கலச பூஜை நடைபெற்றது

திருப்பூர் பிரிஜ்வே காலனியில் அமைந்திருக்கும் அருள்மிகு ஓம் சக்தி ஆலயத்தில் மழை வேண்டி தீர்த்த கலச பூஜை நடைபெற்றது. இந் நிகழ்சியில் குழந்தைகள் கிருஷ்ணன் ராதை, சிவன் பார்வதி, முருகன் போன்ற வேடங்களை அனிந்து கொண்டு, காலை 9 மணிக்கு S.V.காலனி திருமலை நகரில் அமைந்திருக்கும் மாரியம்மன் கோவிலில் இருந்து புறப்பட்டனர்.

200 க்கும் மேற்பட்ட பெண்கள் தீர்த்த கலசத்தை தலையில் சுமந்து கொண்டு ஒம் சக்தி அம்மாவின் போற்றிகளை பக்தி பரவசத்துடன் சொல்லியபடி, ஓம் சக்தி ஆலயத்தில் அமைந்துள்ள அம்மாவிற்கு புனித தீர்த்த நீரினை ஊற்றி அபிஷேகம் செய்தனர்

பின்னர் அலங்கார பூஜை நடைபெற்று பக்தர்களுக்கு அன்னதானமும் வழங்கப்பட்டது

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.