மூல நோய்க்கு இதன் மூலம் தீர்வு!

சமையல் புதிது நலவாழ்வு லைஃப் ஸ்டைல்
karunai 1 - 2026

கருணைக் கிழங்கு மசியல்

தேவையான பொருட்கள்:

பழைய கருணைக்கிழங்கு – 1/2 கிலோ
தக்காளி – 2
புளி – சிறிதளவு
மஞ்சள்தூள் – 1 டீ ஸ்பூன்
மிளகாய்த்தூள் – 1-1/2 டேபிள் ஸ்பூன்
மல்லித்தூள் – 2 டீ ஸ்பூன்
உப்பு – தேவையான அளவு
தேங்காய் துறுவல் – 4 டேபிள் ஸ்பூன்

தாளிக்க:
சின்ன வெங்காயம் – 6
பச்சை மிளகாய் – 3
எண்ணெய் – தேவையான அளவு
கடுகு, உளுந்து – தேவையான அளவு
கருவேப்பிலை – தேவையான அளவு

செய்முறை:

karunai maciyal - 2026

கருணைக்கிழங்கை நன்கு கழுவி வேக வைத்து மசித்து வைத்துக்கொள்ளவும்.

வெங்காயம், பச்சை மிளகாயை பொடியாக நறுக்கி வைத்துக்கொள்ளவும்.

வாணலியை அடுப்பில் வைத்து எண்ணெய் விட்டு கடுகுஉளுந்து, கருவேப்பிலை, சி.வெங்காயம், ப.மிளகாய் சேர்த்து தாளிக்கவும்.

தாளித்தவுடன் புளிக்கரைசலை விட்டு, அதோடு மஞ்சள்தூள், மிளகாய்த்தூள், மல்லித்தூள், தக்காளி, உப்பு சேர்த்து 10 நிமிடம் கொதிக்க விடவும். (புளிக்கரைசல் தண்ணியாக இல்லாமல் ஓரளவு கெட்டியாக இருக்க வேண்டும்)

பின்பு மசித்து வைத்த கருணைக்கிழங்கை சேர்க்கவும்.

பின்பு தேங்காய்த்துறுவல் சேர்த்து 5 நிமிடம் கழித்து இறக்கவும்.

சுவையான கருணைக்கிழங்கு மசியல் ரெடி.

சாம்பார், பருப்பு ரசத்துக்கு மேட்சான சைட் டிஷ் இது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.