ராம்கோ நிறுவன தலைவர் ராம சுப்பிரமணிய ராஜா காலமானார்

சற்றுமுன்
ராம்கோ சிமெண்ட், நூற்பாலைகள் உள்ளிட்ட நிறுவனங்களை நிர்வகித்து வந்தவர் ராம சுப்பிரமணிய ராஜா. வயது 86.
இவருக்கு சுதர்சனம் என்ற மனைவியும், வெங்கட் சுப்ரமணிய ராஜா என்ற மகனும் உள்ளனர்.
ராம சுப்பிரமணிய ராஜா நீண்ட நாட்களாக உடல்நலக் குறைவால் அவதிப்பட்டு வந்தார். இதனால் ராஜபாளையம் அருகே உள்ள ஒரு ஆசிரமத்தில் சிகச்சை பெற்று வந்தார். இந்த நிலையில், சிகச்சை பலனின்றி ராம சுப்பிரமணிய ராஜா இன்று  மாலை காலமானார். 
ராம சுப்பிரமணிய ராஜாவின் உடல் அவரது இல்லத்தில் பொதுமக்கள் பார்வைக்காக வைக்கப்பட்டுள்ளது.
அவரது உடலுக்கு ராம்கோ சிமெண்ட், நூற்பாலைகள் நிர்வாகிகள், ஊழியர்கள் மற்றும் பொதுமக்கள் ஆகியோர் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.