‘காக்டெயில்’ யோகி பாபு குழுவை கைது செய்ய இந்து தமிழர் கட்சி வலியுறுத்தல்!

உரத்த சிந்தனை சினி நியூஸ் சினிமா சென்னை தமிழகம் புகார் பெட்டி லைஃப் ஸ்டைல்
yogi babu 1 - 2026

முருகப் பெருமானை அவமதித்து, இந்துக்களின் மனத்தை புண்படுத்தும் வகையில் செயல்பட்டுள்ள காமெடி நடிகர் யோகி பாபுவை கைது செய்ய வேண்டும் என்று இந்து தமிழர் கட்சி கோரிக்கை விடுத்துள்ளது.

இது குறித்து இந்து தமிழர் கட்சியின் தலைவர் ராம.ரவிக்குமார் கூறிய போது,

காக்டெயில் பட போஸ்டர் இன்று வெளியாகியுள்ளது. இதில், முருகப் பெருமானை அவமதிக்கும் வகையில் படங்கள் உள்ளன. இது இந்து மதத்தை இழிவுபடுத்துவதாகும். எனவே, இந்துமக்கள் மனத்தை புண்படுத்தியுள்ள,

1.காமெடி நடிகர் யோகி பாபு (த/பெதெரியவில்லை)
2. எழுத்து இயக்கம் இரா.விஜய முருகன் (த/பெ தெரியவில்லை)
3. நிர்வாகத் தயாரிப்பு (சௌந்தர் பைரவி)
4. பி.ஜி முத்தையா- M.தீபா (த/பெ தெரியவில்லை) மற்றும் படக் குழுவினர் பலர் சேர்ந்து எடுத்த -நடித்த “காக்டெய்ல்” என்று ஒரு சினிமா படத்தினுடைய ஃப்ர்ஸ் லுக் போஸ்டர் வெளியாகி இருக்கிறது.

yogi babu 2 - 2026

இந்த படத்தை “SOC PICTURE ” பி உஸ்மான் பஹீத் (த/பெ தெரியவில்லை) என்பவர் தயாரித்து வழங்குகிறார். காமெடி நடிகர் “யோகிபாபு “தமிழ் கடவுள் முருகன் போல கையில் வேல் முருகன் அலங்காரம் மயிலுக்கு பதிலாக வெள்ளை நிறத்தில் பறவை இருக்கிறது.

ஆறுபடை வீடு கொண்ட கோடானுகோடி பக்தர்கள் வணங்கத் தகுந்த தமிழ்க் கடவுள் முருகப் பெருமானின் “அடையாளத்தை அழிப்பதற்கும் முருகப்பெருமானை” ஒரு பக்திப் பொருளாக பார்க்காமல் , கேலிப் பொருளாக தமிழ் சமூகம் பார்க்க வேண்டும் என்ற கெட்ட எண்ணத்தோடு இந்துக்கள் பெரும்பான்மையாக வணங்கும் முருகப்பெருமான் மீது உள்ள பக்தியை சிதைக்க வேண்டும் என்ற சிந்தனையோடும், மேலே குறிப்பிட்ட பி.உஸ்மான் பஹீத் த/பெ தெரியவில்லை என்பவர் தயாரித்திருக்கிறார். இது பெரும்பான்மை இந்து சமுதாய மக்களை அவமானப் படுத்துவதாகும். வேற்று மதத்தை சார்ந்த உஸ்மான்ஃபஹீத் என்பவர் இந்து தெய்வங்களை அவமானப் படுத்தி படமெடுப்பது மதக்கலவரத்தை உருவாக்கும் நோக்கமாகும்.

yogi babu - 2026

ஆகவே தமிழக அரசு, காவல்துறை மேற்படி நடிகர் யோகி பாபு மற்றும் இரா விஜய முருகன் சௌந்தர் பைரவி உஸ்மான் பஹீத் உள்ளிட்ட படக்குழுவினர் மீதும், தயாரிப்பு நிறுவனம் மீதும் சட்டநடவடிக்கை எடுத்து பெரும்பான்மை இந்து மக்களின் உணர்வுகளுக்கு மதிப்பு அளிக்குமாறும் தமிழக அரசை காவல்துறையை கேட்டுக்கொள்கிறோம்.

இன்று 03.02.2020 கிருத்திகை நாள். வரக்கூடிய 08.02.2020 தேதி தைப்பூசம். லட்சக்கணக்கான பக்தர்கள் முருகப் பெருமான் திருத்தலம் நோக்கி பாதயாத்திரை வரும் நேரம் ,இந்த நேரத்தில் “முருகப்பெருமானை அடையாள அழிப்பு செய்யும் “இது போன்ற செயல்களை ஏற்றுக்கொள்ள இயலாது.

இது போன்று தொடர்ந்து இந்து கடவுளர்கள் மீதும், இந்து நம்பிக்கைகளின் மீதும் தாக்குதல் நடத்தும் வந்தேறி மதத்தவர்களின் தூண்டுதலில் செயல்படும் ஒவ்வொருவருக்கும் எதிராக, அந்த அந்தப் பகுதி இந்துஇயக்கத்தவர்கள், உணர்வாளர்கள் புகார்களைத் தெரிவிக்க வேண்டும். எனவே அன்பர்கள் தேசபக்தர்கள் இந்து இயக்கத்தவர்கள் அவரவர் பகுதியில் இருக்கக்கூடிய காவல் நிலையங்களில் புகார் மனு அளிக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்திருக்கிறார்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.