police - 2026

பெண் காவலர் வள்ளியம்மாள், விஷ விதையை அரைத்து குடித்து உயிரிழந்துவிட்டார்.. திருப்பூரில் இந்த சோக சம்பவம் நடந்துள்ளது.

திருப்பூர் மாவட்டம் தாராபுரத்தை அடுத்தள்ள மூலனூர் காவல் நிலையத்தில் வேலை பார்க்கும் பெண் காவலர் வள்ளியம்மாள். வயது 31 ஆகிறது.

இவரது கணவர் ராமசாமி. அவருக்கு வயது 35. இவர்களுக்கு கல்யாணம் ஆகி 13 வருடங்கள் ஆகின்றன. ஆனால் குழந்தை இல்லை. இதனால் பல காலமாகவே மன உளைச்சலில் கலங்கி வந்துள்ளார் வள்ளியம்மாள்.

babay - 2026

சமீப காலமாக கடுமையான மனவருத்தத்தில் இருந்ததாக சொல்லப்படுகிறது. இந்நிலையில் சம்பவத்தன்று வீட்டில் யாருமில்லாத நேரம் கண்வலிக்கிழங்கு விதையை அரைத்துக் குடித்துள்ளார்.. இந்த கண்வலிக்கிழங்கு என்பது ஒரு கொடிய வகை மருந்து பயிர் ஆகும்.. வேலிகளில் படர்ந்து காணப்படும்.. காந்தள் மலர் மருந்து செடி என்றும் சொல்வார்கள்.

இந்த விதையைதான் வள்ளியம்மாள் அரைத்து குடித்து மயங்கி விழுந்துள்ளார். திடீரென மனைவி மயங்கி விழுவதை பார்த்ததும் பதறிபோன கணவர் ராமசாமி அவரை மீட்டு சிகிச்சைக்காக தாராபுரம் அரசு ஆஸ்பத்திரிக்கு அழைத்து சென்றார். பின்னர் மேல் சிகிச்சைக்காக கோவை அரசு ஆஸ்பத்திரியிலும் கொண்டு சென்று அனுமதித்தார்.

kanvalli kizhanku - 2026

ஆனால், சிகிச்சை பலனின்றி வள்ளியம்மாள் உயிர் பிரிந்தது.. இது சம்பந்தமாக மூலனூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். கல்யாணமாகி 13 வருஷம் ஆகியும் குழந்தை இல்லாததால் மன உளைச்சல் ஏற்பட்டதால் அவர் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டது விசாரணையில் தெரியவந்தது

ALSO READ:  திருநெல்வேலி சிறப்பு ரயில்களின் சேவை நீட்டிப்பு!

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Trending