மாசி மாத முதல் சனிக்கிழமை! காய்கறி அலங்காரத்தில் மருதூர் அனுமந்தராயசாமி!

ஆன்மிகச் செய்திகள் ஆன்மிகம் உள்ளூர் செய்திகள் கோவை சற்றுமுன் லைஃப் ஸ்டைல்
karamadai hanumantaraya swami - 2026

காரமடை அருகேயுள்ள மருதூர் கிராமத்தில் மிகவும் பிரசித்தியுடைய   பழமை வாய்ந்த  அனுமந்தராயசாமி திருக்கோயில் உள்ளது.

மூலவர் அனுமந்தராயசாமி கருவறையில் ஸ்ரீராம பிரானின் பக்தராக கரம் குவித்து வணங்கும் பக்த ஆஞ்சநேயராக காட்சி தந்தாலும், இத்தலம் வந்து சேவித்த பக்தர்களின் வாழ்வில், எடுத்த காரியங்கள் எல்லாம் ஜெயமானதால் இவர் ஸ்ரீ ஜெயமங்கள ஆஞ்சநேயர் என்றும் போற்றப்படுகிறார்.  இந்த திருத்தலத்தில்  ஒவ்வொரு தமிழ் மாத முதல் சனிக்கிழமை விழா விமரிசையாக நடைபெறும். 

இன்று மாசி மாதம் முதல் சனிக்கிழமை சிறப்பு பூஜையையொட்டி அனுமந்தராயசாமிக்கு அபிஷேகம், அலங்கார பூஜை முடிந்து காய்கறி   அலங்காரத்தில் ஸ்ரீ ஜெயமங்கள ஆஞ்சநேயர் சேவை சாதித்தார்.

உழவின் சிறப்பை உணர்த்தவும் தன்னைத் தேடி வணங்கிட வரும் பக்தர்கள் மற்றும் விவசாயிகள் வாழ்வு வளம் பெற ஸ்ரீ ஜெயமங்கள ஆஞ்சநேயருக்கு இன்று  காய்கறி அலங்காரம் செய்யப்பட்டதாக இத்திருக்கோயில்  பக்தர்கள் கூறினார்கள்.  
முன்னதாக ஓய்வு பெற்ற தலைமையாசிரியர்  டி.பாண்டுராஜ் அவர்களின் பக்தி சொற்பொழிவும், முத்துக்கல்லூர் மற்றும் காரமடை மேற்கு வட்டார பஜனைக் குழுவினரின் பக்தி பஜனையும்    நடைபெற்றது.

இந்த வழிபாட்டில் மேட்டுப்பாளையம், ஊட்டி, குன்னூர், கோத்தகிரி, பெரியநாயக்கன்பாளையம், காரமடை, தேக்கம்பட்டி, புஜங்னூர், தாயனூர், வெள்ளியங்காடு மற்றும் தோலம்பாளையம் சுற்றுவட்டாரப் பகுதியிலிருந்து திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

ஆஞ்சநேயர் பக்தர்கள் குழு சார்பில் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. 

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.