வேளாங்கண்ணி சென்று வரும்போது… பழுதாகி நின்ற வேனுடன் தனியார் பஸ் மோதி… 3 பேர் உயிரிழப்பு!

உரத்த சிந்தனை உள்ளூர் செய்திகள் தமிழகம் நெல்லை லைஃப் ஸ்டைல்
accident near tenkasi - 2026

வேளாங்கண்ணிக்கு சென்று விட்டுத் திரும்பிய நிலையில் பழுதாகி நின்ற வேன் மீது பஸ் மோதி 3 பேர் உயிரிழந்தனர்.

தென்காசி மாவட்டம் சிவகிரி தாலுகா சிவகிரியில் இருந்து தென்காசி செல்லும் தேசிய நெடுஞ்சாலையில், அருளாட்சி மெயின் சாலைக்கும் உள்ளார் நடுவில் உள்ள தனியார் கடைக்கும் அருகே, வேளாங்கண்ணி சர்ச்சுக்கு சென்று விட்டு மதுரையில் இருந்து திருவனந்தபுரம் நோக்கிச் சென்ற ஆம்னி வேன், இன்று காலை 4 மணி அளவில் பழுதாகி நின்றது

அதிலிருந்தவர்களை மாற்று வண்டியில் ஏற்றிவிட்டு ஆம்னி வேன் டிரைவர் மற்றும் இருவர் மட்டும் பழுதடைந்த ஆம்னி காரை சரி செய்வதற்காக விபத்து ரெக்கவரி வாகனத்தில் ஏற்றிவிட்டுச் செல்ல தயாராக இருந்தனர். அந்த நிலையில் எதிர்பாராத விதமாக, சென்னையிலிருந்து செங்கோட்டை நோக்கி திரும்பிக் கொண்டிருந்த தனியார் சொகுசு பேருந்து திடீரென மோதியது.

accident near tenkasi1 - 2026

இதில் சம்பவ இடத்திலேயே மூன்று பேரும் பரிதாபமாக உடல் நசுங்கி உயிரிழந்தனர். ஒருவருக்கு தலையில் தலையில் பலத்த அடி ஏற்பட்டும், மற்றொருவருக்கு உடம்பு முழுவதும் பலத்த காயம் ஏற்பட்டும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்

இதுகுறித்து வாசுதேவநல்லூர் காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப் பட்டு, தீயணைப்பு படை வீரர்கள் மற்றும் காவல்துறையினர் விரைந்து வந்து உடல்களை மீட்டு பிரேத பரிசோதனைக்கு சிவகிரி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்

போலீஸார் விசாரணையில் வேளாங்கண்ணி சர்ச்சுக்கு சென்றுவிட்டு ஊருக்கு திரும்பும்போது ஆம்னி வேன் பழுதாகி நின்றதால் இந்த விபத்து ஏற்பட்டுள்ளது, உயிரிழந்தவர்கள் குறித்து முதல் தகவல் அறிக்கையில் ஆம்னி கார் ரெக்கவரி வேன் டிரைவர் சிவகாசியைச் சேர்ந்த ராஜசேகர் மற்றும் இரண்டு பேர் கேரளாவைச் சேர்ந்தவர்கள் என்று தெரிய வந்துள்ளது

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.