குடியுரிமைச் சட்டத்தை விளக்கி… புதிய தமிழகம் டாக்டர் கிருஷ்ணசாமி பொதுக்கூட்டம்!

உள்ளூர் செய்திகள் திருச்சி லைஃப் ஸ்டைல்
krishnasami meeting - 2026

புதிய தமிழகம் கட்சியின் சார்பில் திருச்சி மலைக்கோட்டை சறுக்குப் பாறை ஆண்டார் வீதியில் நாளை (பிப்.27 ஆம் தேதி, வியாழக்கிழமை) மாலை 4.30க்கு குடியுரிமை திருத்த சட்டத்தை விளக்கி, பொதுக்கூட்டம் நடைபெறுகிறது.

இந்தப் பொதுக்கூட்டத்தில் மாநில ஒருங்கிணைப்பாளர் ஐயப்பன் வரவேற்று பேசுகிறார். மாவட்ட செயலாளர்கள் குணா, தினகரன், இளையராஜா, பிச்சமுத்து, நம்பிராஜ் முன்னிலை வகிக்கின்றனர்.

கூட்டத்தில் புதிய தமிழகம் கட்சி நிறுவனத்தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி தலைமை தாங்கி குடியுரிமைச் சட்டம் பாதுகாப்பு மற்றும் அதன் நன்மைகள் குறித்து பொதுமக்கள் மத்தியில் விளக்கிப் பேசுகிறார். 

பொதுக்கூட்டத்தின் முடிவில் ஸ்ரீரங்கம் தொகுதி செயலாளர் சண்முகம் நன்றி கூறுகிறார். கூட்டத்திற்கான ஏற்பாடுகளை திருச்சி மாவட்ட புதிய தமிழகம் கட்சி நிர்வாகிகள் செய்து வருகின்றனர்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.