‘100’ நல்ல முறையில் செயல்பட்டுக் கொண்டிருக்கிறது!

அடடே... அப்படியா? சற்றுமுன் தமிழகம் லைஃப் ஸ்டைல்
police 100 number - 2026

தமிழ்நாடு காவல் கட்டுப்பாட்டு அறை எண் 100 தொழில்நுட்பக் கோளாறு காரணமாக செயல்படாததால் மக்கள் அவதி என்று ஒரு செய்தி சமூக தளங்களில் வைரலாக பரவியது.

இந்த நிலையில் இது பொய்யான தகவல் என்று போலீசார் கூறியுள்ளனர். தமிழ்நாடு காவல் கட்டுப்பாட்டு அறை எண் 100 நல்லமுறையில் செயல்பட்டு கொண்டிருக்கிறது வதந்திகளை நம்ப வேண்டாம் என்று தமிழ்நாடு காவல்துறை அலுவலகத்திலிருந்து தகவல் தெரிவித்துள்ளனர்!

சமூக தளங்களில் இதுபோன்று 100 எண் வேலை செய்யவில்லை அதுபோல் ஆம்புலன்சுக்கான எண் 108 வேலை செய்யவில்லை என்றெல்லாம் அவ்வப்போது தகவல்களை பரப்பி வருகின்றனர். அதை உண்மை என்று நம்பி, வேறு ஏதோ நான்கு இலக்கு எண்களுக்கு திசை திருப்பிவிடச் சொல்ல, அதையும் சிலர் அவற்றை பார்வர்டு செய்தும் வருகின்றனர்

இந்த நிலையில் போலீசார் இந்த தகவல் பொய்யானது வதந்திகளை நம்ப வேண்டாம் என்று கூறியுள்ளனர்!

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.