December 6, 2025, 2:29 AM
26 C
Chennai

அறநிலையத் துறையிடம் இருந்து கோயில்களைக் காப்போம்

25 June26 sri padaleeswarar temple - 2025

நமது திருக்கோவில்களுக்கென பூக் கட்டுபவர்கள், சங்கு முழங்குபவர்கள், வண்ணார், வாத்தியம் இசைப்பவர்கள் என்ற கோவில் கைங்கர்யக்காரர்கள் பெரும்பாலும் இல்லை என்றே தெரிகிறது. ஒருவேளை அவர்கள் இருப்பதாகக் கணக்குக் காட்டி சம்பளம் பெற்றுக் கொண்டு கபளீகரம் செய்யப் படுகிறதா என்றும் தெரியவில்லை.

திருவரங்கத்தில் பழைய உத்ஸவர் திருமேனி மீண்டும் அடையாளம் காணக் காரணமே கைங்கர்யம் செய்து வந்த வண்ணார்தான். எத்தனை கோவில்களில் நம் முன்னோர் செய்த வழக்கப்படி எத்தகைய பணியாளர்கள் இருக்க வேண்டும் என்பதை விளக்கும் மிக அவசியமான கட்டுரை….இது.

தெரிந்துகொள்ளுங்கள் என் உறவுகளே..!

கோயில்களில்  உள்துறை ஊழியர்கள் சார்ந்த மோசடிகள் …. தமிழகத்தில் உள்ள அறநிலையத் துறை கோயில்களில் பணியாளர்கள் மூன்று வகை!

1) கமிஷ்னர், JC, AC, EO, செலக்க்ஷன் கிரேடு EO.

2) கோயில் அலுவலக மேனேஜர், சூப்பிரன்ட், கணக்குப்பிள்ளை, (கிளர்க் )மற்றும் அலுவலக பணியாளர்கள்,

3) குருக்கள், பரிசாரகர், ஓதுவார், தவில் நாதஸ்வரம், பூக்கட்டி, பண்டாரம், வேத சாஸ்திரிகள், மெய்க்காவல், வண்ணார் என்பர். இவர்களே உள்துறைபணியாளர்கள்.

இவற்றில் முதலில் உள்ளவர்கள் கோயில் பணத்தில் அதிக சம்பளம் வாங்கும் அதிகாரம் கொண்டவர்கள். உண்டியல் பணத்தில் கார்வாங்கி, அர்ச்சனை பணத்தில் பெட்ரோல் போட்டுக் கொண்டு காரில் வருபவர்கள்.

இரண்டாவதாக உள்ளவர்கள் அறநிலையத் துறையால் நேரடியாக நியமிக்கப் பட்டவர்கள், மற்றும் தொகுப்பு ஊதியத்தில் இருப்பவர்கள் என உண்டு. இவர்களுக்கு அரசு சம்பளமும் உண்டு. மேலும் கோயில் அலுவலகத்திலேயே அமர்ந்தபடி ஒரு துளி வியர்வை சிந்தாமல் அலுங்காமல் குலுங்காமல் மேற்படி வகையில் வருமானமும் உண்டு.

பெரிய கோயில்களில் இந்த அலுவலகப் பணியாளர்கள் வைத்ததே சட்டம். அலுவலகத்தில் இருந்து சுவாமிக்கு எந்த பொருளும் போகாது. ஆனால் காலபூஜை நடைபெற இவர்களுக்கும், குருக்களுக்கும் ஒரு புரிந்துணர்வு ஒப்பந்தம் உண்டு.

ஒரு உபயதாரர் ஒரு வேண்டுதலுக்காக அலுவலகத்தில் பணம் கட்டினால், அந்த பணம் அலுவலகத்தோடு சரி. பெயருக்கு ஒரு ரசீது கிழித்துவிட்டு முறைப்படி பங்கு போடப் பட்டு விடும்.

மறுநாள் அந்த உபயதாரர் அந்த வேண்டுதலை செய்ய வரும்பொழுது, குருக்கள் எப்பாடு பட்டாவது உரிய பொருட்களை சேகரித்து அந்த வேண்டுதலை நிறைவேற்றி தந்துவிட வேண்டும். குருக்கள் அவர் சாமார்த்தியத்திற்க்கு ஏதாவது உபயதாரரிடம் வாங்கிக் கொள்ளலாம்.

குருக்கள் இப்படி சமர்த்தாக நடந்து கொள்ளாமல், உங்கள் உபயத்திற்க்காக அலுவலகத்தில் இவ்வளவு பணம் கட்டினீர்கள். ஆனால் அலுவலகத்தில் இருந்து எந்த பொருளும் வரவில்லையை என்று கூறினார் அவ்வளவுதான். அதன்பின் அந்த குருக்களை ஆயிரம் கண்கள் பின்தொடரும். ஏதாவது தவறு கண்டிப்பிடித்து பழி வாங்குதல் நடைபெறும்.

கிராமக் கோயில்கள் வகையில் சுமார் நூறு கோயிலுக்கு ஒரு கிளர்க் இருப்பார். இந்த கிளர்க் யார் என்றால், அந்தப் பகுதியில் பெரியசாதி எதுவோ, அந்த சாதியை சார்ந்தவராக இருப்பார்.

இந்த நூறு கோயிலுக்கும் எவ்வளவு நிலம் உள்ளது என்பது இந்த கிளர்க்கிற்க்கு அத்துப்படி. அதிகபட்சம் இந்த நிலங்கள் எல்லாம் இந்த கிளர்க் சார்ந்த சாதிக்காரனிடம் இருக்கும். நாளை அந்த கிளர்க்குக்கு ஏதாவது பிரச்சனை என்றால் அந்த சாதிக்காரன் வந்து பாதுகாப்பான்.

அடுத்து மூன்றாவதாக உள்ளவர்களே உள்துறை ஊழியர்கள். இந்த உள்துறை ஊழியர்களுக்கு பிரதானமாக தேவை ஜால்ரா. ஜால்ரா போடத் தெரிந்தால் இந்த உள்துறை ஊழியர்கள் பிழைத்துக் கொள்ளலாம். இல்லையேல் பிழைப்பு காலி. காரணம் பணிப் பாதுகாப்பு இல்லை.

ஒரு குருக்கள் அல்லது நாதஸ்வரம் 60 வயது ஆகி ஓய்வு பெற்றுவிட்டால், அதன் பின் முறைப்படி குருக்களையோ, நாதஸ்வரத்தையோ, ஓதுவார்களையோ நியமிப்பதில்லை அறமற்ற துறை அதிகாரிகள். ஏற்கெனவே, உள்துறை ஊழியர்களில் வேதம் ஓதும் சாஸ்திரிகளை நாற்பது ஆண்டு முன்பே திராவிட ஆட்சிகள் கோயிலை விட்டு விரட்டி விட்டனர்.

கோயில் நந்தவனத்தில் இருந்து தினம்தோறும் பூக்கட்டி தரும் பூக்கட்டியை அவருக்குரிய மாணிய நிலத்தை பிடுங்கி அனுப்பியாயிற்று. அடுத்து கோயில்களில் நித்தம் சங்கு இசைக்கும் பண்டாரம், இறைவன் துணிகளை சுத்தம் செய்யும் வண்ணார் என அவர்களுக்குரிய மாணிய நிலங்களையும் பிடுங்கி வெளியே துரத்தியாயிற்று.

அடுத்து மீதி இருப்பது குருக்கள், ஓதுவார், நாதஸ்வரம். இதில் பல கோயில்களில் ஓதுவார் நியமிக்கப்படவில்லை.  அதேபோல், பல கோயில்களில் நாதஸ்வரமும் நியமிக்கப்படவில்லை. சில கோயில்களில் என் தந்தை நாதஸ்வரம் வாசித்தார் என்ற முறையில் நான் வாசிக்கின்றேன் என்ற முறையிலும், இன்ன கோயில் நாதஸ்வரம் என்ற அடையாளத்திற்க்காகவுமே நாதஸ்வர பணி நடைபெறுகின்றது.

மீதி இருப்பது குருக்கள். அவருக்கு வேறு வழி இல்லை. கோயில் பூஜை விட்டால் வேறு எதுவும் தெரியாது. பெரிய கோயில்களில் குருக்களுக்கு 60 வயது என்று ஓய்வு பெற்றால் அடுத்து முறைப்படி வேறு அர்ச்சகரை நியமிக்காமல், இருக்கும் அர்ச்சரை கொண்டு அல்லது எதிர்காலத்தில் நமக்கு அர்ச்சக நியமனம் கிடைக்கும் என்ற நினைப்பில் வாரிசுகள் தட்டு காசு வருமானத்தை நம்பி பணி செயவர் .

இதில் ஒரு சில பெரிய கோயில்களில் வாரிசு அர்ச்சகர் நியமனத்திற்க்கு பல லட்சங்களில் பேரம் நடைபெறும். இவற்றுக்கெல்லாம் மசியாமல் ஏதோ ஒரு குருக்கள் சட்டம் பேசி, சட்டரீதியாக போராட்டம் மேற்க்கொண்டால் ஒட்டு மொத்த துறையே அவரை பழி வாங்கக் துடிக்கும்.

இப்படி கோயில்களில் உள்துறை பணியாளர்களை நியமிக்காமலேயே, ஒரு துறை கோயில் வருமானத்தை சுரண்டிக் கொண்டிருக்கின்றது. அதிலும் கிராமத்து கோயில்களில் அர்ச்சகர் நியமனம் என்ற பேச்சுக்கு இடமே இல்லை.

ஆனால் கிராம கோயில்கள் சொத்துகளை ஏலம்விட்டு கொள்ளையடிக்க மட்டும் முதலில் வந்து நிற்க்கும் இந்த துறை. இந்துக்களிடமும் பக்தர்களிடமும் விழிப்புணர்வு ஏற்படாதவரை இதற்கு விமோசனம் இல்லை.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் டிச.06 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

Topics

பஞ்சாங்கம் டிச.06 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

பஞ்சாங்கம் டிச.04 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

ராஜபாளையம்-கொலை வழக்கில் கைதான இருவர் குண்டர் சட்டத்தில் கைது…

ராஜபாளையம் அருகில் தேவதானம் நச்சாடை தவிர்த்தருளிய சுவாமி கோயில் காவலர்கள் இருவர்...

Entertainment News

Popular Categories