குற்றாலத்திற்கு சுற்றுலா சென்ற வேன் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் ஒரு வயது சிறுமி உள்பட 2 பேர் இறந்தனர். மேலும் 5 பேர் படுகாயம் அடைந்தனர்.
திருநெல்வேலி மாவட்டம் தருவை இந்திராகாந்தி புதுக்காலனி பகுதியை சேர்ந்த கட்டிடத்தொழிலாளர்கள் 25 பேர் தங்களது குடும்பத்தினருடன் ஒரு வேனில் வெள்ளிக்கிழமை காலை குற்றாலத்திற்கு சுற்றுலா வந்தனர். தென்காசி-அம்பை பிரதான சாலை திரவியநகர் பகுதியில் வந்த போது எதிர்பாராத விதமாக வேன் பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.
இதில் வேனில் இருந்த பாலமுருகன் மகள் ப்ரீத்தி பாலா (1). முருகன் மகன் முத்துசெல்வம் (25) ஆகியோர் சம்பவ இடத்திலேயே இறந்தனர். மேலும் வேனில் இருந்த ராமச்சந்திரன் மகள் சுகன்யா (15), முருகேஸ் மகன் புவனேஸ் (13). முத்துசெல்வி (23, வான்மதி (19) பால்மாரி (10) ஆகியோர் பலத்த காயம் ஏற்பட்டது. தகவல் அறிந்த பாவூர்சத்திரம் போலீஸார் விரைந்து சென்று காயமடைந்தவர்களை சிகிச்சைக்காக தென்காசி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். மேலும் இது குறித்து வழக்குப்பதிவு செய்து தருவையை சேர்ந்த வேன் டிரைவர் பால்மாரி என்பவரிடம் விசாரித்து வருகின்றனர்.

இந்த விபத்திற்கு காரணம் டிரைவர் கண் அயர்ந்த நேரத்தில் சாலையின் இடது ஓரத்தில் சிறிய பள்ளம் ஒன்று இருந்துள்ளது , அதில் விட்டுவிடக்கூடாது என வலப்பக்கம் திருப்பியுள்ளார் ,அப்போது எதிரே சைக்கிளில் ஒருவர் வர அவர் மேல் மோதிவிடாமல் இருக்க திருப்ப இன்னொருவர் வர பதட்டத்தில் வண்டி அவரின் கட்டுகோப்பை இழந்துவிட வேன் கவிழ்ந்து உள்ளது , சுற்றுலா செல்லும் அனைவருக்கும் நாம் சொல்வதெல்லாம் ஒன்றுதான் டிரைவர்களுக்கு ஓய்வு கொடுங்கள் , டிரைவர்களுக்கு ஓர் வேண்டுகோள் வேனில் இருப்பவர்கள் சொல்கிறார் என ரன்னிங்கில் டிவிடி மாற்றுவது ,பென்டிரைவை மாற்றுவது போன்ற கவனக்குறைவான செயல்களை செய்யாதீர்கள் உங்களை நம்பி உங்கள் குடும்பம் மட்டுமல்ல உங்களை நம்பி உங்களோடு பயணிக்கும் பலரின் உயிரும் அவர்களின் குடும்பமும் இல்லை என்பதை மனதில் கொள்ளுங்கள்



