‘மூடிட்டு போடா’ ரசிகரை சாடி பிக்பாஸ் நடிகையின் பதில்! வறுத்தெடுக்கும் நெட்டிசன்ஸ்!

சற்றுமுன் சினி நியூஸ் சினிமா
rithika - 2026

பட வாய்ப்பு இல்லையா என கேட்ட ரசிகரை மூடிட்டு போடா என நடுவிரலை காட்டிய ரித்விகா.. பெரிய நயன்தாரான்னு நினைப்பு

ரித்விகா பல படங்களில் நடித்திருந்தாலும் மெட்ராஸ் படம் அவருக்கு ஒரு நல்ல அடையாளத்தை தமிழ் சினிமாவில் கொடுத்தது. அதனைத் தொடர்ந்து பல படங்களில் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துவந்தார்.

பட வாய்ப்புகள் சுத்தமாக இல்லாத நிலையில் பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு டைட்டிலை வென்றார். பிக்பாஸ் வீட்டில் ஒன்றுமே தெரியாத பாப்பா போல நடந்து கொண்டு மக்களின் மனதை மாற்றி எப்படியோ வெற்றியைப் பெற்று விட்டார். என்கிறார் ஒருவர்

மேலும் இந்த ஆட்டிடுயூட்ட பிக்பாஸ்ல குப்பை அள்ளும் போது காட்டலை என்றும் பதிவிட்டிருக்கிறார்கள்

ஆனால் தற்போது தான் இவரின் சுயரூபம் தெரிந்துள்ளது. சினிமாவில் யாராக இருந்தாலும் ரசிகர்கள் ஆதரவு இல்லை என்றால் அதல பாதாளத்திற்குச் சென்று விடுவார்கள். அது விரைவில் ரித்விகா வாழ்க்கையில் நடந்துவிடும் போல.

rithvika 1 - 2026

ரித்விகா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் புகைப்படம் ஒன்றை வெளியிட்டுள்ளார். அதற்கு ரசிகர் ஒருவர் பட வாய்ப்பு இல்லை போல என கேட்டுள்ளார். அதற்கு ரித்விகா மூடிட்டு போடா என தனது நடுவிரலை உயர்த்திக் காட்டி அசிங்கமாக பேசியுள்ளார்.

இதற்கு ரசிகர்கள் இடையே பெரும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. ஒன்னுமே இல்லாத உங்களை உருவாக்கியவர்கள் ரசிகர்கள் தான், அவர்களது சிறிய கேள்விக்கு கூட உங்களால் பொறுமையாக பதில் சொல்லவில்லை என்றால் நீங்கள் எவ்வளவு பெரிய இடத்திற்குச் சென்றாலும் திரும்பி கீழே வர ரொம்ப நேரம் ஆகாது எனவும் பலவகையில் ரசிகர்கள் பேச ஆரம்பித்துவிட்டனர்.

ரசிகர்களை பகைத்துக் கொண்டால் சினிமாவில் நிலைக்க முடியாது என்ற அடிப்படை கூட தெரியாமல் இப்படி அசிங்கப்பட்டு கொண்டார் ரித்விகா.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.