நாள் முழுக்க சுறுசுறுப்பாக இருக்க..

நலவாழ்வு லைஃப் ஸ்டைல்
garlic - 2026

வறுத்த பூண்டுகளின் நன்மைகள்!

சாப்பிட்ட ஒரு மணி நேரத்தில், பூண்டு செரிமானமாகிவிடும். அடுத்த ஒரு மணி நேரத்தில் தொடங்கி, பூண்டு உடலில் உள்ள ப்ரீ-ராடிக்கல்களை எதிர்த்து உடல்நலத்தைக் காக்கும், புற்றுநோய் செல்களை அழிக்கும்.

அடுத்த இரண்டு மணி நேரத்தில், உடலின் வளர்சிதைமாற்றம் தூண்டப்படும், தேவையில்லாத நீர், கொழுப்பு குறையும். ஆறு முதல் ஏழு மணி நேரம் தாண்டியவுடன், பூண்டு இரத்த நாளங்களில் நுழையும், பேக்டீரியாக்களை எதிர்த்து உடலுக்கு ஆரோக்கியம் தரும்.

அடுத்த ஒரு மணி நேரத்தில், பூண்டின் சத்துகளை உடல் உறிஞ்சிக்கொள்ளும், இது சிறந்த பாதுகாப்பாகச் செயல்படும். அதன்பிறகுதான், பூண்டின் நிஜமான பெரிய பலன்கள் தெரியத்தொடங்கும்,

இதயம் சார்ந்த பல பிரச்னைகளைப் பூண்டு குணப்படுத்தி உடலுக்கு நல்ல நோய் எதிர்ப்புச்சக்தியைத் தரும், எலும்புகளை வலுவாக்கி, சோர்வைப் போக்கும்

சுருக்கமாகச் சொன்னால், நாள்முழுக்கச் சுறுசுறுப்போடும் ஆரோக்கியத்தோடும் வாழ்வதற்கு, தினமும் ஆறே ஆறு வறுத்த பூண்டுகள் போதும்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.