ஆடி 18; தாமிரபரணி நீர் எடுத்து முப்பிடாதி அம்மனுக்கு அபிஷேகம்!

ஆன்மிகச் செய்திகள் சற்றுமுன் நெல்லை லைஃப் ஸ்டைல்
tamirabarani2 - 2026

ஆடி பதினெட்டாம் பெருக்கு இன்று நெல்லை மாநகரம் விழாக்கோலம் பூண்டது. வடக்கு விளாகம் கிராமத்தில் இந்து அன்னையர் முன்னணி சார்பாக அம்மனுக்கு மஞ்சள் நீராட்டு ஊர்வலம் நடைபெற்றது.

இதன் ஒரு பகுதியாக, தாமிரபரணி ஆற்றில் இருந்து புனித நீர் எடுத்து ஊரில் உள்ள முப்புடாதி அம்மனுக்கு அபிஷேகம் செய்யப்பட்டது.

இந்த நிகழ்ச்சிக்கு, இந்துமுன்னணி மேலப்பாளையம் மண்டல செயலாளர் சுரேஷ் தலைமை வகித்தார். மேலப்பாளையம் மண்டல தலைவர் எஸ்.சங்கர், மேலப்பாளையம் மண்டல துணைத் தலைவர் S.R.M. கண்ணன் முன்னிலை வகிக்க, ஊர்வலத்தை கொடியசைத்து துவக்கி வைத்தார், இந்து முன்னணி மாநிலச் செயலாளர் வழக்கறிஞர் கா.குற்றாலநாதன்.

tamirabarani1 - 2026

இந்த நிகழ்ச்சியில்,சுடலை (இந்துமுன்னணி மாவட்ட செயலாளர்), ராஜசெல்வம் (மாவட்ட செயற்குழு உறுப்பினர்), துரைராஜ் (மாவட்ட செயற்குழு உறுப்பினர்) உட்பட பலர் கலந்து கொண்டனர்.

வடக்கு விளாகத்தை சார்ந்த பெண்கள் சிறுமியர்கள் தாமிரபரணி நதியில் புனித நீர் எடுத்து ஊர்வலமாக சென்று வடக்கு விளாகம் முப்பிடாதி அம்மனுக்கு அபிஷேகம் செய்தனர்!

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.