லஞ்ச் பாக்ஸ் கார்னர்: கொள்ளு சாதம்!

Published:

kollu rice - 2026

கொள்ளு சாதம்
‌தேவையான பொருட்கள்

கொள்ளு – 1 கப்,
சீரகச் சம்பா அரிசி அல்லது வேறு ஏதானும் ஒரு அரிசி -1 கப்,
பெரிய வெங்காயம் -1,
தக்காளி – 1,
பச்சை மிளகாய் – 2,
கறிவேப்பிலை – சிறிதளவு,
கொத்தமல்லி – சிறிதளவு,
கடுகு – 1 தேக்கரண்டி,
மல்லித்தூள் – 1 தேக்கரண்டி,
சீரகத்தூள் – 1/2 தேக்கரண்டி,
மிளகாய்த்தூள் – 1 தேக்கரண்டி,
மஞ்சள் தூள் – அரை தேக்கரண்டி,
உப்பு – தேவைக்கேற்ப,
நெய் – 1 தேக்கரண்டி.

செய்முறை :

கொள்ளுவை மலர வேக விடவும்.
தக்காளி, வெங்காயம், கொத்தமல்லியை பொடியாக நறுக்கி கொள்ளவும்.
சீரகச்சம்பா அல்லது வேறு அரிசியை உதிரியாக வேக விடவும், பின் ஆற வைக்கவும்.

வாணலியில் நெய் 1 தேக்கரண்டி ஊற்றிக் காய்ந்ததும், கடுகு, கறிவேப்பிலை போட்டு தாளித்த பின்னர் வெங்காயம் சேர்த்து வதக்கவும். வெங்காயம் நன்றாக வதங்கியதும் தக்காளியை சேர்த்து வதக்கவும்.

ALSO READ:  சதுர்த்திக்கு சுதேசி, மண் பிள்ளையாரையே வாங்குங்கள், விற்பனை செய்யுங்கள்: பிரதமரின் அறைகூவல்!

தக்காளி நன்றாக வதங்கியதும் மஞ்சள்தூள், மல்லித்தூள், சீரகத்தூள், மிளகாய்த்தூள், சிறிது உப்பு சேர்த்து வதக்கவும். அடுத்து அதில் வெந்த கொள்ளுவை சேர்த்து வதக்கவும்.
நன்கு வதங்கியவுடன் ஆறிய சாதம் சேர்த்து கலக்கவும். கடைசியாக கொத்தமல்லித் தழை தூவி பரிமாறவும்.

Related articles

Recent articles

spot_img