dhaniya rice - 2026

லஞ்ச் பாக்ஸ் கார்னர்: தனியா சாதம்!

சமையல் புதிது லைஃப் ஸ்டைல்
dhaniya rice - 2026

தனியா சாதம்
தேவையான பொருட்கள் :
தனியா – 100 கிராம்
காய்ந்த மிளகாய் – 4
மிளகு – 1 தேக்கரண்டி
துவரம் பருப்பு – 1 தேக்கரண்டி
உளுத்தம்பருப்பு – 1 தேக்கரண்டி
கடலைப்பருப்பு – 1 தேக்கரண்டி
பெருங்காயத்தூள் – 1 தேக்கரண்டி
உப்பு – தேவைக்கு

செய்முறை :
வாணலியில் தனியாவை கொட்டி வாசனை வரும் வரை சிவக்க வறுக்கவும்.
மற்ற பொருட்களையும் அதுபோல வறுத்தெடுத்து ஆறிய பின்பு அவற்றை அரைத்து உப்பு, பெருங்காய பொடி கலந்து பாட்டிலில் அடைத்து வைத்துக்கொள்ளுங்கள்.

சாப்பிட விருப்பமின்மை, வாந்தி வருவது போன்ற உணர்வு தலைசுற்றல், அஜீரண தொந்தரவுகள் இருக்கும் போது இந்த பொடியில் இரண்டு தேக்கரண்டி எடுத்து சூடான சாதத்துடன் நெய் அல்லது நல்லெண்ணெய் கலந்து சாப்பிட வேண்டும். வாரம் ஒருமுறை இதை சாப்பிட்டு வந்தால் ஜீரண சக்தி மேம்படும்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.