ஜவ்வரிசி இட்லி பொடி வெங்காய ஊத்தப்பம்!

சமையல் புதிது நலவாழ்வு பொது தகவல்கள்
javarisi - 2026

ஜவ்வரிசி – இட்லி பொடி வெங்காய ஊத்தப்பம்

தேவையான பொருட்கள் :

இட்லி அரிசி – 4 கப்,
உளுந்து – ஒரு கப்,
ஜவ்வரிசி – கால் கிலோ,
வெங்காயம் – 2,
கடுகு, உளுத்தம்பருப்பு – தலா ஒரு டீஸ்பூன்,
பச்சை மிளகாய் – 4,
இட்லி மிளகாய் பொடி – தேவையான அளவு
எண்ணெய், உப்பு – தேவையான அளவு.

செய்முறை :

sago onion uthappam - 2026

வெங்காயம், ப.மிளகாயை பொடியாக நறுக்கிக் கொள்ளவும்.

அரிசி, உளுந்தை ஒன்றாக சேர்த்து ஊற வைத்து, தோசைக்கு அரைப்பது போல் அரைத்து, புளிக்கவிட்டு உப்பு சேர்க்கவும்.

மறுநாள் ஜவ்வரிசியை அரை மணி நேரம் ஊற வைத்து மாவில் சேர்க்கவும்.

வாணலியில் எண்ணெயை சூடாக்கி. கடுகு, உளுத்தம்பருப்பு, பச்சை மிளகாய் தாளித்து மாவில் சேர்க்கவும்.

தோசைக் கல்லை அடுப்பில் வைத்து சூடானதும் மாவை ஊற்றி அதன் மேல் நறுக்கி வைத்துள்ள வெங்காயம், இட்லி மிளகாய் பொடி தூவி, சுற்றி எண்ணெய் விட்டு, இருபுறமும் வேகவிட்டு எடுத்து, காரச் சட்னியுடன் பரிமாறவும்.

சூப்பரான ஜவ்வரிசி – இட்லி பொடி வெங்காய ஊத்தப்பம் ரெடி.

குறிப்பு: விருப்பப்பட்டால், கேரட் துருவல் சேர்த்துக் கொள்ளலாம்

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.