ஏப்.15 க்குப் பின்னர் படிப்படியாக எல்லாம் சரியாகும்!

இந்தியா சற்றுமுன் லைஃப் ஸ்டைல்
corona virus alert - 2026

ஏப்.15க்குப் பின்னர் படிப்படியாக கட்டுப்பாடுகள் தளர்த்தப் படும் என்று தெரிகிறது. ஏப்ரல் 15ந் தேதி முதல் குறைந்தளவு விமான சேவையை வழங்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.

ஏப்ரல் 15ம் தேதிக்குப் பின்னர் படிப்படியாக கட்டுப்பாடுகள் தளர்த்தப்படலாம் என்று கூறப்படுகிறது. ஊரடங்கு உத்தரவின் காரணமாக அனைத்து தொழிற்சாலைகளும் மூடப் பட்டிருப்பதால் நாட்டின் உற்பத்தி முடங்கி, மிகப்பெரிய பொருளாதார இழப்பை சந்தித்து வருகிறது.

தொழிற்சாலைகள் மூடப்பட்டு, மீண்டும் திறக்கப் படும் போது பொருளாதார நிலை சீரடைய பல்வேறு நடவடிக்கைகளை அவை எடுக்கும். இந்நிலையில் ஷிப்ட் நேரத்தை குறைப்பதன் மூலம் ஆட்டோ மொபைல் போன்ற தொழில்களின் உற்பத்தியை அனுமதிப்பது குறித்து மத்திய அரசு மாநில அரசுகளுடன் தொழிற்சாலைகள் தரபில் ஆலோசிக்கப் பட்டு வருகிறது.

பல்வேறு நிறுவனங்கள் தங்கள் ஊழியர்களுக்கு சம்பளம் வழங்க இந்த நடவடிக்கை உதவும் என்று கருதப்படுகிறது. தனிமைப் படுத்தப்பட்ட தொழிற் கூடங்கள், பணியாளர்களுக்கு தனி பாஸ்கள், தொழிலாளர்களுக்கு தனி போக்குவரத்து வசதி, மருத்துவக் காப்பீடு, தனிமனித விலகல் போன்றவற்றுடன் தொழில்துறைக்கு புத்துயிர் கொடுக்க முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

இதனிடையே ஏப். 15ம் தேதிக்குப் பின்னர் ரயில், விமான சேவைகள் படிப்படியாக சீரடையும் என்று கூறப் படுகிறது. அதிக பாதிப்புள்ள இடங்களை மட்டும் கூடுதல் கவனத்துடன் தனிமைப் படுத்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப் படலாம்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.