கோ கொரோனா சொல்பவர்களை நக்கல் அடிக்கும் விஷ்ணு விஷால்!

தமிழகம் பொது தகவல்கள்
vishnu 2 - 2026

கொரோனா தொற்றை எதிர்க்க இந்திய அரசு மிக பெரிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. ஆனால் பலர் பொறுப்பு இல்லாமல் கோ கொரோனா என்றால் நோய் தொற்று போய் விடும் என்று அலட்சியமாக சமூக வலைத்தளங்களில் பேசியும், வாட்ஸ் அப் ஸ்டேட்டஸ் வைத்து வருகின்றனர்.

இதைப்பார்த்து கடுப்பான விஷ்ணு விஷால், கோ கொரோனா என்றால், கொரோனா போய்விடுமா இது அறியாமையின் உச்சமாகத் தெரிகிறது. இதை பார்க்கும் போது சிரிக்கத் தான் தோன்றுகிறது என்று கூறி, முண்டாசுபட்டி படத்தில் வரும் காமெடி குறித்து ரசிகர் ஒருவர் செய்த மீமை தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்து உள்ளார்.

vishnu - 2026

இந்த படத்தில் ஒரு காட்சியில் முண்டாசுபட்டி ஊர் முழுக்க ‘ திரும்பிபோ ‘ என்று வீட்டு கதவுகளில் எழுதியிருப்பார்கள், இதை பார்க்கும் காளி வெங்கெட் அதை விசாரிப்பார் அதற்கு ஊர் மக்கள் இப்படி செய்தால் வீட்டிற்கு வரும் காட்டேரி உள்ளே வராது என்று கூறுவார்கள்.

இந்த நகைச்சுவையான காட்சியை தற்போது மீமாக மாற்றியுள்ளனர். சமூக வலைத்தள வாசிகளும் சரி மற்றும் சரியான விழிப்புணர்வு அற்ற மக்களும் ‘கோ கொரோனா’ என்று கூறி ரோடுகளிலும் தங்கள் சமூக வலைத்தள பக்கங்களிலும் பதிவிட்டு வருகின்றனர்.

vishnu 3 - 2026

இதை தவிர்த்து தன் சமூக வலைத்தள பக்கங்கள் முழுக்க கோ கொரோனா என்று தீ பந்தங்களை ஏந்தி வெடி வெடித்து ஊர் சுற்றுபவர்களை தொடர்ந்து கிண்டல் செய்துள்ளார் விஷ்ணு விஷால். பிரதமர் மோடி வீட்டில் இருந்த படி மின் விளக்குகளை அனைத்து மற்றும் ஒளி தரும் டார்ச்லைட்களை அகல் விளக்கு போன்ற பொருட்களை ஏற்ற சொன்னார்.

vishnu 1 - 2026

பலர் ஏன் அதை புரிந்து கொள்ளாமல் இப்படி கூட்டம் கூடியுள்ளனர் இது தீபாவளி கிடையாது என்று கடுமையாக கூறியிருக்கிறார். முண்டாசுபட்டி திரைப்படத்தில் வரும் காட்சியை , மீமாக மாற்றிய புகைப்படத்தை தனது டிவிட்டரில் பதிவிட்டுள்ளார். நடிகர் சிவா இயக்குநர் விக்னேஷ் சிவன் போன்ற பிரபலங்களும் கோ கொரோனா எனப் பதிவிட்டிருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.